விழுப்புரம்: மரக்காணத்தில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!
விழுப்புரம்: மரக்காணத்தில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் போலி சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து தனிப்படை மூலம் கண்காணிக்கப்பட்டு போலி சான்றிதழ் வழங்கிய 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீ நாதா இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யுமாறு மரக்காணம் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் மரக்காணம் காவலர்கள் வட்டாட்சியர் அலுவலகம் இருக்கும் பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
EPS Vs Appavu Heated Argument in Assembly | வெளியேறிய PTR அப்பாவு - எடப்பாடி வாக்குவாதம்! MK Stalin
அப்போது நகர் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவர், தொடர்ந்து அங்கு வரும் மக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தந்துள்ளார். சந்தேகமடைந்த தனிப்படை காவலர்கள் பாலுவை விசாரணைக்காக மரக்காணம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அய்யனார் என்பவர் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை 500 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலியாக தருவதாக கூறினார். பின்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்பந்த முறையில் உதவியாளராக பணிபுரியும் அய்யனாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
PTR Latest Speech | மெட்ரோ! அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட PTR | Tamilnadu Assembly
விசாரணையில் போலி சான்றிதழ்களை வழங்கியதை ஒப்புக் கொண்டார். பின்பு இருவரையும் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் சையது ஹமிது என்பவருக்கும் தொடர்பு உள்ளதை காவலர்கள் விசாரணையில் உறுதி படுத்தியுள்ளனனர். தற்போது சையது ஹமிது என்பவர் தலைமறைவாக உள்ளதால் தனிப்படை காவலர்கள் தேடி வருகின்றனர். சமிபகாலமாக மரக்காணம் பகுதியில் போலி ஆவணங்கள் வைத்து மோசடிகள் நடைபெற்று வருவது மரக்காணம் பகுதியில் பெரும் பராபரப்பை ஏற்படுதியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்