கணவன், மனைவி தற்கொலை: சோகத்தில் முடிந்த வாழ்க்கை...ஏன் இந்த முடிவு ?
மரக்காணம் அருகே குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன்,மனைவி விஷம் குடித்து தற்கொலை
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை, கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்,(வயது31), இவரது மனைவி கீர்த்திகா, (26). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. ஆனால் குழந்தை இல்லை. இந்நிலையில், இவர்கள் கோவிலுக்கு செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முருக்கேரி கிராமத்திற்கு வந்துள்ளனர்.
அங்குள்ள ஒரு மருந்து கடையில் விஷம் வாங்கிக்கொண்டு முருக்கேரி ஏரிக்கரையில் பார்த்திபன் மற்றும் கீர்த்தி ஆகியோர் விஷம் குடித்துள்ளனர். இதையடுத்து சிறுவாடியில் உள்ள தனது தாய்மாமா சதீஷூக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, இருவரும் விஷம் குடித்து விட்டதாக கீர்த்தி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சதீஷ் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் மீட்டு முறுக்கேரி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கீர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். மேலும், உயிருக்கு போரடிகொண்டிருந்த பார்த்திபன் மேல்சிகிச்சைக்காக திண்டிவனம்அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடல் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பென்சோடையசிபைன்கள் பயன்பாடு போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம் பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம் . தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி நேற்கோள்ளூம் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)





















