மேலும் அறிய

விழுப்புரத்தில் கடன் விவகாரத்தில் வாலிபர் கொலை - 3 பேர் கைது

ராம்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாலாஜி, அய்யப்பன், பிரகாஷ் ஆகிய மூவரை நகர போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

விழுப்புரம் நகர பகுதியான சித்தேரிக்கரை பகுதியில் நேற்றுமுன்தினம் ராம்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாலாஜி, அய்யப்பன், பிரகாஷ் ஆகிய மூவரை நகர போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். ராம்குமாரிடம் ரூ.2 ஆயிரம் கடன் கேட்டபோது ஏற்பட்ட சண்டையில் பாலாஜி என்பவரின் தாயாரின் ஜாக்கெட்டை கிழித்து அவமான படுத்தியதால் ஆத்திரத்தில் பாலாஜி தனது நண்பர்களுடன் இணைந்து கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

வாலிபர் கொலை

விழுப்புரம் சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஸ்ரீராம் என்கிற ராம்குமார் (30). இவர், விழுப்புரம் பகுதியை சேர்ந்த பலரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை இவர், கடன் பெற்றவர்களிடமிருந்து வட்டி பணத்தை வசூலிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

விழுப்புரம் சித்தேரிக்கரை ரயில்வே கேட் அருகில் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பாலாஜி (27) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீராமை வழிமறித்து அவரை வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

3 பேர் சிக்கினர்

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் நகர காவல்நிலைய போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பாலாஜியுடன், அவரது நண்பர்களான கண்டமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணப்பன் மகன் பிரகாஷ் (26), கண்டமங்கலம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் அய்யப்பன் (22) ஆகியோர் சேர்ந்து ஸ்ரீராமை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பாலாஜி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற 3 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

விழுப்புரத்தில் கடன் விவகாரத்தில் வாலிபர் கொலை -  3 பேர் கைது

விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள் விவரம் வருமாறு:-

கொலைக்கான காரணம்?

ஸ்ரீராமிடம் கடந்த மாதம் 19-ந் தேதியன்று பாலாஜி சென்று ரூ.2 ஆயிரம் கடனாக தரும்படி கேட்டுள்ளார். அதற்கு,  ஸ்ரீராம் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீராமிடம் தகராறு செய்து அவரை திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீராம், நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த பிரச்சினைக்கு பிறகு பாலாஜி, தனது வீட்டுக்கு வராமல் தலைமறைவாக இருந்துள்ளார். சித்தேரிக்கரை பகுதிக்கு வந்தால் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று கருதி வீட்டுக்கே வராமல் குடும்பத்தினரையும் சந்திக்க முடியாமல் தனது நண்பர்களுடன் பாலாஜி தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதற்கெல்லாம் காரணமான ஸ்ரீராம் மீது பாலாஜிக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. தன்னை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ஸ்ரீராம் உயிரோடு இருக்கக்கூடாது என்று எண்ணி அவரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினார். இதற்கு தனது நண்பர்கள் பிரகாஷ், அய்யப்பனின் உதவியை நாடினார். அதற்கு அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி, ஸ்ரீராமின் நடமாட்டத்தை மறைமுகமாக கண்காணித்து வந்த பாலாஜி, நேற்று மாலை சித்தேரிக்கரை ரயில்வே கேட் அருகே ஸ்ரீராம் தனியாக செல்வதை பார்த்ததும் பட்டப்பகல் என்றுகூட பாராமல் பாலாஜி, தனது நண்பர்கள் உதவியுடன் ஸ்ரீராமை சுற்றி வளைத்து வீச்சரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையே வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர்.

விழுப்புரத்தில் கடன் விவகாரத்தில் வாலிபர் கொலை -  3 பேர் கைது

கைது நடவடிக்கை

தொடர்ந்து, பிடிபட்ட பாலாஜி, பிரகாஷ், அய்யப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய வீச்சரிவாளை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார், விழுப்புரம் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

3 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஸ்ரீராமின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம் சித்தேரிக்கரையில் கொலை செய்யப்பட்ட ஸ்ரீராமின் மனைவி பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையறிந்து விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள், ஸ்ரீராமின் கொலைக்கு நீதி வேண்டும் என்று கோஷமிட்டவாறும், கதறி அழுதவாறும் தொடர்ந்து போராட்டம் செய்தனர். பின்னர் விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஸ்ரீராமின் குடும்பத்தினர், உறவினர்கள் கூறுகையில், ஸ்ரீராமை கொலை செய்த 3 கொலையாளிகளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத்தர வேண்டும், ஸ்ரீராமின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரது 3 குழந்தைகளின் கல்வி செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும், மேலும் ஸ்ரீராமின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.

Villupuram crime They cut the road and killed him because he did not pay interest TNN விழுப்புரத்தில் பரபரப்பு...  வட்டிக்கு பணம் கேட்டு கொடுக்காததால் இளைஞர் வெட்டி கொலை

இதை கேட்டறிந்த கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக எழுதிக்கொடுக்குமாறும், அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதேபோல், இந்த வழக்கை எவ்வளவு விரைவாக விசாரணை செய்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தருவதும், உங்களுக்கு நியாயம் கிடைப்பதும் காவல்துறையின் பொறுப்பு என்று துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காவல்துறையின் அலட்சியத்தால் பறிபோன உயிர் - குழந்தைகளுடன் மனைவி கதறல்

பாலாஜியை முன்கூட்டியே போலீசார் கைது செய்திருந்தால் எனது கணவர் உயிரோடு இருந்திருப்பாரே குழந்தைகளுடன் மனைவி கதறல்

ஆட்சியர் அலுவலகத்திற்கு, ஸ்ரீராமின் மனைவி பிரியா (23) தனது குழந்தைகளான ரக்‌ஷணன் (4), ரக்‌ஷிதா (3), ரக்‌ஷனா என்ற 6 மாத கைக்குழந்தை ஆகியோருடன் வந்திருந்தார். அப்போது பிரியா, கண்ணீர் மல்க கதறி அழுதபடி கூறுகையில், “எனது கணவர் ஸ்ரீராமை கொலை செய்த பாலாஜியை பற்றி ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் என்னுடைய கணவர் புகார் கூறியிருந்தார். அப்போது போலீசார் பெயரளவிற்கு விசாரணை மட்டும் செய்துவிட்டு அப்படியே அலட்சியமாக விட்டுவிட்டனர். பாலாஜியை முன்கூட்டியே போலீசார் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு எனது கணவர் உயிரோடு இருந்திருப்பாரே, என்னையும், எனது குழந்தைகளையும் யார் காப்பாற்றுவது, எனது குழந்தைகளுக்கு ஒரு வழி சொல்லுங்கள்” என்று கதறி அழுதார். இது அங்கிருந்த காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது.

விழுப்புரத்தில் கடன் விவகாரத்தில் வாலிபர் கொலை -  3 பேர் கைது

விழுப்புரத்தில் மீண்டும் தலைதூக்கும் கஞ்சா விற்பனை

ஸ்ரீராமின் உறவினர்கள் கூறுகையில், சித்தேரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை தலைதூக்கியுள்ளது. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர், அடிக்கடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அறுவறுக்கத்தக்க வார்த்தைகளை பேசி ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையால் பல குற்ற சம்பவங்களும் நடந்து வருகிறது என்று குற்றம்சாட்டினர்.

கைது நடவடிக்கை : 

இந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக பாலாஜி, அய்யப்பன், பிரகாஷ் ஆகிய மூவரை நகர போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். ராம்குமாரிடம் ரூ.2 ஆயிரம் கடன் கேட்டபோது ஏற்பட்ட சண்டையில் பாலாஜி என்பவரின் தாயாரின் ஜாக்கெட்டை கிழித்து அவமான படுத்தியதால் ஆத்திரத்தில் பாலாஜி தனது நண்பர்களுடன் இணைந்து கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

U19 Womens WC Final 2025: U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்VCK TVK Alliance : OPERATION திருமா! விஜய்யின் முதல் ORDER..ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
U19 Womens WC Final 2025: U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
WB Crime: பெண் குழந்தைக்காக கிட்னியை விற்ற கணவன் ..! ரூ.10 லட்சம், காதலனுடன் ஓடிப்போன  மனைவி
WB Crime: பெண் குழந்தைக்காக கிட்னியை விற்ற கணவன் ..! ரூ.10 லட்சம், காதலனுடன் ஓடிப்போன மனைவி
SwaRail SuperApp: இனி ரயில்வேயின் மொத்த சேவையும் ஒரே ”செயலி”-யில் - ஸ்வரெயில் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா?
SwaRail SuperApp: இனி ரயில்வேயின் மொத்த சேவையும் ஒரே ”செயலி”-யில் - ஸ்வரெயில் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா?
Muzaffarnagar crime : திருமணம் செய்ய வற்புறுத்தல்.. பாலியல் வன்கொடுமை..  எரிந்த நிலையில் மண்டை ஓடு! அதிர்ந்த உ.பி
Muzaffarnagar crime : திருமணம் செய்ய வற்புறுத்தல்.. பாலியல் வன்கொடுமை.. எரிந்த நிலையில் மண்டை ஓடு! அதிர்ந்த உ.பி
One Year Of TVK Vijay: தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கம் - விஜயின் ஓராண்டு அரசியல் பயணம் - தமிழக அரசியலில் தாக்கம்?
One Year Of TVK Vijay: தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கம் - விஜயின் ஓராண்டு அரசியல் பயணம் - தமிழக அரசியலில் தாக்கம்?
Embed widget