மேலும் அறிய

தாய், மகளை கொலை செய்து சடலங்களுடன் பாலியல் உறவு: விழுப்புரம் வழக்கில் சைக்கோ கொள்ளையன் கைது!

‛இதுவரை இவர் செய்த கொலை, பாலியல் வல்லுறவு அனைத்துமே 60 முதல் 80 வயதான பெண்கள்...’

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கலித்திரம்பட்டு கண்டப்பன்சாவடி கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவரின் மனைவி சரோஜா. இவருக்கு வயது 80. இவர் தனது மகள் பூங்காவனத்துடன் வசித்துவந்தார். இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மற்ற நபர்கள் வெளியே சென்று விட்டதால் சரோஜாவும் பூங்காவனமும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை சூழலைப் பயன்படுத்தி அதிகாலை வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் வீட்டிலிருந்த சரோஜா, பூங்காவனம் இருவரையும் அடித்து கொலை செய்துவிட்டு, அவர்களிடமிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்கள் சடலத்தை உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டமங்கலம் காவல் துறையினர் உறவினர்களிடம் புகாரைப் பெற்று விசாரணையைத் தொடங்கினர். விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி நடந்தது. சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகையும், திருவெண்ணெய்நல்லூரில் நான்கு வருடங்களுக்கு முன் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட இடத்தில் கிடைத்த கைரேகையும் ஒத்துப்போயின. திருவெண்ணெய்நல்லூர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் கைரேகை கவிதாஸ் என்பவருடையது என்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


தாய், மகளை கொலை செய்து சடலங்களுடன் பாலியல் உறவு: விழுப்புரம் வழக்கில் சைக்கோ கொள்ளையன் கைது!

அந்த கவிதாஸ், கலித்திறாம்பட்டு அருகே உள்ள சூளையில் ஜேசிபி ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் பிரபு தலைமையிலான தனிப்படை கவிதாஸை கைது செய்தனர். இவர் விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர். மேற்கொண்டு காவல் துறை விசாரணையில், கவிதாஸ் வீட்டில் தனியாக இருந்த சரோஜா மற்றும் பூங்காவனம் இருவரையும் தடியால் தாக்கி அவர்களிடமிருந்த 8 கிராம் நகையை கொள்ளையடித்து, கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் உயிரிழந்த பிறகு சடலத்துடன் பாலியல் உறவு வைத்து தப்பிச்சென்றார், என்று காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றவாளி வீட்டில் இருக்கும் வயதான பெண்களை நோட்டமிட்டு அவர்களைக் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கொள்ளை அடிக்கிறவர், மேலும் தாக்கப்பட்ட பெண்கள் உயிரிழந்த பிறகு அல்லது மயக்க நிலையில் இருக்கும்போது பாலியல் வல்லுறவு செய்யும் குணமுடையவர் என்பது தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.


தாய், மகளை கொலை செய்து சடலங்களுடன் பாலியல் உறவு: விழுப்புரம் வழக்கில் சைக்கோ கொள்ளையன் கைது!

இது பற்றி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எபிபியிடம் கூறியதாவது, கடந்தகால வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு இறுதியில் பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவு செய்து, அவர்கள் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற வழக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

இதற்கிடையில் விழுப்புரம் இரட்டை கொலை மற்றும் பாலியல் வல்லுறவு வழக்கில் விசாரணை செய்ததில் இவர்தான் கடலூரிலும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. கவிதாஸ் தொடர்ந்து இதுபோன்ற கொடுங் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில், இவர் மீது ஒரு கொலை மற்றும் வல்லுறவு வழக்கு உள்ளது. கள்ளக்குறிச்சி திருநாவலூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை, கொள்ளை மற்றும் வல்லுறவு வழக்கும், சேலம் மாவட்டத்தில் இரு கொள்ளை வழக்கும் பதிவாகியுள்ளது, என்றார் அவர்.


தாய், மகளை கொலை செய்து சடலங்களுடன் பாலியல் உறவு: விழுப்புரம் வழக்கில் சைக்கோ கொள்ளையன் கைது!

இவருக்கு மது குடித்துவிட்டால் உடலுறவு கொள்ளவேண்டும் என்ற மனநிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனியாக இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு இப்படி செய்து வந்துள்ளார். இவரை பொருத்தவரை இதுவரை இவர் செய்த கொலை, பாலியல் வல்லுறவு அனைத்துமே 60 முதல் 80 வயதான பெண்கள். இந்த வழக்கை விரைவில் விசாரணை செய்து, இவருக்கு கடுங்காவல் தண்டனை பெற்று தரவேண்டும், எனக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget