மேலும் அறிய

மின்வாரியத்தில் வேலைவாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்த அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 58 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்தவர் ஹரிஷ் மனைவி தங்கமயில் (வயது 41). இவருடைய தந்தை கலியமூர்த்தி திருவெண்ணெய்நல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராக பணிசெய்து, கடந்த 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு 2017-ம் ஆண்டு முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதே மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சங்கரன் (51) என்பவர் பழக்கமானார். இவர், கடந்த 22.3.2019 அன்று கலியமூர்த்தியின் வீட்டிற்கு சென்று அவரிடம், தற்போது மின்சார வாரியத்தில் கேங்மேன், உதவி பொறியாளர் வேலை காலிப் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும், தனக்கு அரசியல் பிரமுகர்கள் சிலருடன் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் மூலமாக தங்களுக்கு கீழ் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு மின்வாரியத்தில் கேங்மேன், உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.3 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய கலியமூர்த்தி மற்றும் அவரது கீழ் பணிபுரியும் 40 பேர்களிடம் தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வீதமும், 18 பேரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதமும் ஆக மொத்தம் ரூ.94 லட்சத்து 50 ஆயிரத்தை சங்கரன் பெற்றார். ஆனால், பல மாதங்களாகியும் மேற்கண்ட நபர்களுக்கு சங்கரன், வேலை ஏதும் வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார். இதனிடையே, கடந்த 2020-ம் ஆண்டு கலியமூர்த்தி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு சங்கரன், தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக வேலை வந்துவிடும் என்று கூறினார்.

ஆனால், வேலை ஏதும் கிடைக்கவில்லை. இந்த சூழலில், 22.2.2021 அன்று மின்சார வாரியத்தில் இருந்த காலிப் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டதை அறிந்த மேற்கண்ட நபர்கள், சங்கரனிடம் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி பிரச்சினை செய்தனர். அதன் பின்னர் பல தவணைகளாக ரூ.24 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் சங்கரன் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.70 லட்சத்தை உரியவர்களுக்கு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் மனு கொடுத்தனர். இம்மனுவை பெற்ற அவர், அதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்து, உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்பேரில், சங்கரன் மீது ஏமாற்றும் நோக்கம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் இருதயராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இந்நிலையில், நேற்றிரவு சங்கரனை போலீசார் கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கைதான சங்கரன் தற்போது சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
வெடிக்குறோம் கலக்குறோம்... குல்பி ஐஸ், டால்பின், டோரிமோன்... தீபாவளிக்கு விதவிதமான பட்டாசுகள் அறிமுகம்
வெடிக்குறோம் கலக்குறோம்... குல்பி ஐஸ், டால்பின், டோரிமோன்... தீபாவளிக்கு விதவிதமான பட்டாசுகள் அறிமுகம்
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Watch Video: உவ்வே... சீனாவில் வானில் இருந்து பொழிந்த மல மழை; என்ன காரணம்? வீடியோ!
Watch Video: உவ்வே... சீனாவில் வானில் இருந்து பொழிந்த மல மழை; என்ன காரணம்? வீடியோ!
Embed widget