விழுப்புரம் மாவட்டத்தில் தலைதூக்கும் கஞ்சா கலாச்சாரம் ; அதிரடியில் இறங்கிய காவல் துறை
விழுப்புரம் மாவட்டத்தில் தலைதூக்கும் கஞ்சா கலச்சாரம் ; அதிரடியில் இறங்கிய காவல் துறை
விழுப்புரம்: திண்டிவனம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மயிலம் காவல் ஆய்வாளர் லட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் ஞானசேகரன், சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் முப்பளி கிராமம் அங்காளம்மன் கோவில் அருகில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் சம்பந்தமாக கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை வழி மறித்து சோதனை செய்தனர். சோதனையில் 3 பேர் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரெட்டணை கிராமம் ராஜு நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 23) ராமலிங்கம் (21) இடையஞ்சாவடியை சேர்ந்த சந்துரு (25)ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,500 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
விழுப்புரம்: மரக்காணம் அருகே உள்ள கைப்பணி காலனியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). இவர் அங்குள்ள கடலோரப் பகுதியில் கஞ்சா விற்பதாக மரக்காணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மரக்காணம் ஆய்வாளர் சுரேஷ் பாபு, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், விஜயரங்கன் மற்றும் போலீசார் ரோந்துபணி மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் சந்கதேகத்துக்கு இடமாக நின்ற வாலிபர் சஞ்சையை பிடித்து விசாரித்ததில் அவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து அவர் வைத்திருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்: காணை உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விழுப்புரம் அருகே தோகப்பாடி கிராம பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வைலாமூர் கிராமத்தைசேர்ந்த முருகன் (வயது 33), விக்னேஷ் (25) ஆகியோர் என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்: வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில் நகரம் இங்கு மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் பல இடங்களில் வாகன சோதனை செய்து வந்தனர். இந்நிலையில் ஆரோவில் அருகே கோட்டகுப்பம் போலீசார் வாகன சோதனை செய்தனர் அப்பொழுது அவ்வழியாக சந்தேகத்திற்கும் படி நைஜீரிய நாட்டு வாலிபர் ஒருவர் வந்தபோது போலீசார் அவரை மடக்க முயன்ற போது அவர் தப்பி ஓடி விட்டார் பின்பு போலீசார் வாகனத்தில் பின்தொடர்ந்த போது நைஜீரிய நாட்டு வாலிபர் தன் கையில் வைத்திருந்த பையை தூக்கி வீசி விட்டு சென்று விட்டார். அந்த பையை போலீசார் சோதனை செய்தது நான்கு கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நைஜீரிய நாட்டு வாலிபரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்