மேலும் அறிய
Advertisement
பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல்; 5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 இளைஞர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 இளைஞர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுள்ள பெண் ஒருவரை கடந்த 2017ஆம் ஆண்டு இயற்கை உபாதைக் கழிக்க சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை, அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் தூக்கி சென்று மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை தங்களது செல்போன்களிலும் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அந்த வீடியோவை காட்டி அடிக்கடி அந்த பெண்ணை மிரட்டி தனிமையான இடத்திற்கு வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளது. ஒருக்கட்டத்தில் அந்த கும்பல் விடுத்த மிரட்டலுக்கு அந்த பெண் அடிப்பணிய மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தாங்கள் எடுத்து வைத்திருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண். இது தொடர்பாக தனது உறவினரிடம் தெரிவித்தைத் தொடர்ந்து, அந்த உறவினர், இது குறித்து வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்புணர்ச்சி உள்ளிட்ட வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்த வளவனூர் போலீசார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டிய ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி(28), வினோத்குமார்(29), பாபு(30), பிரதீப் ராஜ்(28), ரஜினிசுமன்(30) உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு அதனைக் காட்டியே தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தது, ஒரு பெண்ணிற்கு இழைத்த பெரும் குற்றமாக கருதி குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், தலா ரூ.38 ஆயிரம் அபராதமும் விதித்து விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார். இதனைத்தொடர்ந்து சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
பாலியல் துஷ்பிரயோகம்
பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் துஷ்பிரயோகம் ஆகும் , அதில் ஒருவர் அந்த நபரின் அனுமதியின்றி வேண்டுமென்றே பாலியல் ரீதியாகத் தொடுகிறார். இது பாலியல் வன்முறையின் ஒரு வடிவமாகும் , இதில் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் , தடியடி , கற்பழிப்பு (கட்டாயமாக பாலியல் ஊடுருவல், எவ்வளவு சிறியதாக இருந்தாலும்), போதைப்பொருள் வசதியுள்ள பாலியல் வன்கொடுமை , மற்றும் பாலியல் முறையில் நபரை சித்திரவதை செய்தல், பாலியல் பலாத்காரம் அல்லது பலாத்கார முயற்சி, அத்துடன் தேவையற்ற பாலியல் தொடர்பு அல்லது அச்சுறுத்தல்கள் போன்ற தாக்குதல்கள் உட்பட பல வடிவங்களை பாலியல் வன்கொடுமை எடுக்கிறது. பொதுவாக, ஒருவர் மற்றொருவரின் உடலின் எந்தப் பகுதியையும் உடலுறவு முறையில், ஆடைகள் மூலம், அந்த நபரின் அனுமதியின்றி தொடும்போது பாலியல் வன்கொடுமை ஏற்படுகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion