மேலும் அறிய

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகன் மிதுன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மகா விஷ்ணு (20). இவர்கள் 2 பேரும் வேலாண்டி பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். நேற்று கல்லூரி மாணவர்கள் 15 பேர் புதுவைக்கு சுற்றுலா வந்தனர். அதன் பின்னர் கோட்டக்குப்பம் அருகே பெரிய முதலியார் சாடியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் அங்கிருந்து பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு நேற்று மதியம் பெரிய முதலியார் சாவடியில் உள்ள கடற்கரையில் குளித்தனர். அப்போது ராட்சத அலை மிதுன், மகாவிஷ்ணு ஆகிய 2 பேரை இழுத்து சென்றது.

அதிர்ச்சியடைந்த 2 பேரும் அபய குரலிட்டனர். உடனடியாக மற்றவர்கள் 2 பேரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் 2 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களிடன் இணைந்து கடலில் இறங்கி தேடினர். ஆனால் அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இன்று தந்திராயன் குப்பம் கடற்கரையில் 2 பேர் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது கடலில் மூழ்கிய மாணவர்கள் மிதுன், மகா விஷ்ணு ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இதுபற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பெரியமுதலியார் சாவடி வந்தனர். இறந்துபோன தங்களது மகன்களின் உடலை பார்த்து கதறி துடித்தனர். கடலில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Director Ram:
Director Ram: "என்னோட 4 படம் பிடிக்கலனாலும் இந்த படம் பிடிக்கும்" ஏழு கடல் ஏழு மலைக்கு உத்தரவாதம் தரும் ராம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
CBSE Compartment Exams 2024: ஜூலை 15 முதல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்; முழு அட்டவணை இதோ!
Director Ram:
Director Ram: "என்னோட 4 படம் பிடிக்கலனாலும் இந்த படம் பிடிக்கும்" ஏழு கடல் ஏழு மலைக்கு உத்தரவாதம் தரும் ராம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
Stock Market: 78,000 புள்ளிகள் உயர்வு! புதிய சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
'ஜெய் தமிழ்நாடு' தெலுங்கில் பதவியேற்ற தமிழ்நாட்டு எம்பி! திரும்பி பார்க்க வைத்த காங்கிரஸ்காரர்!
Abp Nadu Impact:  ஏபிபி நாடு செய்தி எதிரொலி-  தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
ஏபிபி நாடு செய்தி எதிரொலி- தருவைகுளம் சூழல்சார் சுற்றுலா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
Embed widget