Watch video: விறகு வெட்டி எடுத்துச் செல்லும் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் துணை ஆய்வாளர்: வீடியோ வைரல்
வேலியே பயிரை மேயும் என்பது போல் மக்களைக் காக்கும் காவல் துறையினர் விறகு வெட்டி எடுத்துச் செல்லும் விவசாயிகளிடம் அதிகாரமாய் லஞ்சம் பெறும் துணை ஆய்வாளர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
சாத்தனூர் அணை பகுதியில் விறகு வெட்டி எடுத்துச் செல்லும் விவசாயிகளிடம் அதிகாரமாய் லஞ்சம் வாங்கும் துணை ஆய்வாளர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையடுக்கும் நபர்களிடமும், உரிமம் பெறாமல் ஆத்து மணல், ஓடை மணல் மற்றும் முரம்பு மண் எடுக்கும் நபர்களிடமும், பட்டா நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்டிச் செல்லும் விவசாயிகளிடமும் காவல் துறையினர் லஞ்சம் கேட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது.
இந்நிலையில் செங்கம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட "சாத்தனூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் சுரேஷ்" இவர் பட்டா நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி விற்பனைக்காக எடுத்துச் செல்லும் விவசாயிகளிடம் பணம் கேட்டு அதிகாரமாய் லஞ்சம் வாங்கி பணத்தை பாக்கெட்டில் வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர்அணை பகுதியில் விறகு வெட்டி எடுத்துச் செல்லும் விவசாயிகளிடம் அதிகாரமாய் லஞ்சம் வாங்கும் துணை ஆய்வாளர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்@imanojprabakar @SRajaJourno @abpnadu pic.twitter.com/GnCfNGD0aw
— Vinoth (@Vinoth05503970) May 11, 2022
அந்த வீடியோவில் நான்கு விவசாயிகள் மற்றும் சாத்தனூர் காவல்நிலைய "உதவி ஆய்வாளார் சுரேஷ் அப்போது தொலைபேசியில் மற்றவரிடம் இப்படியெல்லாம் பண்ணால் என்ன அர்த்தம் அதலாம் ஒன்றும் கிடையாது மரத்துக்கும் ஒன்றும் கிடையாது , இதற்கும் ஒன்று கிடையாது என்று கூறி தொலைபேசியை கட்பண்ணி வைத்துள்ளார். அப்போது அந்த விவசாயிடம் உண்ணிடம் எவ்வளவு பணம் உள்ளது என்று துணை ஆய்வாளர் சுரேஷ் கேட்டு விவசாயிகளிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றுக்கொள்கிறார்.
இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என பெற்ற பிள்ளைகள், மனைவி, பெற்றோர்களை விட்டுவிட்டு இரவு பகல் பாராமல் நேர்மையுடன் செயல்பட்டு வரும் காவலர்கள் மத்தியில் இது போல ஒரு சில காவலர்கள் அப்பாவி விவசாயிகளிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்து லஞ்சம் பெறும் நிகழ்வால் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கும் அவப்பெயரே மிஞ்சுகிறது. இதனால் காவல்துறையினர் என்றாலே லஞ்சம் தான் கேட்பார்கள் என்று பொதுமக்கள் மனதில் பதிந்துள்ளது இந்த செயலால் இந்நிலையில் லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் மீது எத்தகைய செயலால்நடவடிக்கை காவல் துறையினர் மேற்கொள்வார்கள் என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாரிடம் பேசுகையில்;
சாத்தனூர் காவல்நிலைய சிறப்பு உதவி துணை ஆய்வாளர் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ குறித்து நான் அவரிடம் விசாரணை நடத்தினேன். அப்போது அவர் தன்னுடைய நிலத்தில் வேப்பமரம் வெட்டியதாகவும் அதற்காக அவர்கள் பணம் தரவேண்டியது இருந்தது, அதனால் தான் பணம் கொடுத்தார் என்று தெரிவித்ததாக கூறினார். மேலும் இந்த சம்பவம் குறித்து நான் டிஎஸ்பியை துணை ஆய்வாளரிடம் விசாரணை நடத்த கூறியுள்ளேன். அந்த விசாரணை முடிந்த உடன் தெரியவரும். அவர்மீது குற்றம் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்