மேலும் அறிய

வேலூரில் போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் தீக்குளிப்பு - சாதி பெயரை சொல்லி காவலர் திட்டியதாக புகார்

தீ குளித்த சரத் என்ற இளைஞர் மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் தீக்குளித்த சரத் மற்றும் அவரது தம்பி சஞ்சய் ஆகிய இருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவியை கடத்தி உள்ளனர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத் வயது (25). இவர் கடந்த 11ஆம் தேதி மாலை திடீரென மேல்பாடி காவல் நிலையத்துக்கு சற்று தொலைவில் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டு தீ குளித்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்த பொது மக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தீக்காயங்களுடன் அலறித் துடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரின் நெஞ்சைப் பதறவைக்கின்றன.

வேலூரில் போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் தீக்குளிப்பு - சாதி பெயரை சொல்லி காவலர் திட்டியதாக புகார்

அந்த வீடியோ காட்சிகளில் பேசும் சரத்குமார், 'திருவலம் காவல் நிலைய காவல்துறையினர் என்னைத் தொடர்ந்து துன்புறுத்தினார்கள். நான் பட்டியலின இளைஞர் என்பதால் மேல்பாடி எஸ்.ஐ கார்த்திக் என்னை சாதிப் பெயரைச் சொல்லி அடிக்கிறார். சில நாள்களுக்கு முன்பு செருப்பால் அடித்தார். எப்போது பார்த்தாலும், சாதிப் பெயரைச் சொல்லியே அடிக்கிறார். என் தம்பி வழக்கில் என்னையும் சேர்த்துவிட்டுட்டு அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு சொன்னாலும் மிரட்டி வருகிறார். நெல் அறுவடை செய்யப்பட்ட பணம் வாங்குவதற்காக போய்க்கிட்டிருந்த என்னை மடக்கி, எஸ்.ஐ கார்த்திக் ஹெல்மெட்டாலயே என் தலையில அடித்தார். பின்னர் காவல் துறையினர் எனது வீட்டுக்கு வந்து அவதுராக பேசுகின்றனர், நான் நெல் அறுக்கும் இயந்திரம் வைத்துள்ளேன் அதை ஓட்டிச்செல்லும் போது நிறுத்துகின்றனர். இதனால் எனக்கு அசிங்கமாக உள்ளது என கூறினார்.

வேலூரில் போக்சோ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் தீக்குளிப்பு - சாதி பெயரை சொல்லி காவலர் திட்டியதாக புகார்

இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, மேல்பாடி காவல் நிலையம் அருகே தீ குளித்த சரத் என்ற இளைஞர் மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் தீக்குளித்த சரத் மற்றும் அவரது தம்பி சஞ்சய் ஆகிய இருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவியை கடத்தி உள்ளனர். இது தொடர்பாக இருவர் மீதும் கடத்தல் மற்றும் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேலும் இவர்கள் மீது மணல் கடத்தல் போன்ற வழக்குகளும் உள்ளது. போக்சோ வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் எஸ்.ஐ ஒருவர் சரத்தின் வீட்டுக்கு சென்று நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு வரும் படி கூறியுள்ளார் இதை திசை திருப்பவே அந்த இளைஞர் மதுபோதையில் வந்து தீ குளித்துள்ளதாக கூறினார். அதனை தொடர்ந்து மேல்பாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த எஸ்ஐ கார்த்தி என்பவர் சரத் என்ற வாலிபரை அவதுராக பேசியதாகவும், தாக்கியதாவும் கூறி 11ஆம் தேதி இரவு மேல்பாடி காவல் நிலையம் அருகில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து மேல்பாடி எஸ்ஐ கார்த்தியை திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படைக்கு  மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" வீடியோ வெளியிடுவோம் " சிறுமி பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய அசாம் இளைஞர்கள்
திருமணத்தை மீறிய உறவு !! மது அருந்திய பெண்கள் !! இறுதியில் நடந்த சம்பவம்
திருமணத்தை மீறிய உறவு !! மது அருந்திய பெண்கள் !! இறுதியில் நடந்த சம்பவம்
" மனைவியை கொன்று விட்டேன் " உறவினர்களின் Whats App குழுவில் வீடியோ வெளியிட்ட கணவன்
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: தேர்தல் ஆணையம் போட்ட ரூல்ஸ்.. உணவு, கார், தேங்காய், சேர், சேலை - எதுக்கு எவ்வளவு செலவு?
TN Election 2026: தேர்தல் ஆணையம் போட்ட ரூல்ஸ்.. உணவு, கார், தேங்காய், சேர், சேலை - எதுக்கு எவ்வளவு செலவு?
Pan Card: பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டை மட்டும் போதாது - மத்திய அரசு அதிரடி
Pan Card: பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டை மட்டும் போதாது - மத்திய அரசு அதிரடி
TN Election: தமிழ்நாட்டில் கடைசியாக சுயேச்சை வேட்பாளர் வென்றது எப்போது? மேஜிக் நடந்தது எப்படி? டிடிவி ஆ?
TN Election: தமிழ்நாட்டில் கடைசியாக சுயேச்சை வேட்பாளர் வென்றது எப்போது? மேஜிக் நடந்தது எப்படி? டிடிவி ஆ?
Renault Duster 2026: ரெனால்ட் டஸ்டரின் எந்த வேரியண்ட் பெஸ்ட்? அம்சங்கள், விலையில் எது கட்டுப்படி ஆகும்?
Renault Duster 2026: ரெனால்ட் டஸ்டரின் எந்த வேரியண்ட் பெஸ்ட்? அம்சங்கள், விலையில் எது கட்டுப்படி ஆகும்?
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
Embed widget