Watch Video: பாம்பு கடிக்கு கங்கை நதி மருந்தா? கட்டித் தொங்கவிடப்பட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி
கங்கை நதியில் பாம்பு கடிபட்ட ஒருவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று கயிறு கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் விஜய் சிங். இவரது சொந்த ஊர் உத்தரபிரதேசத்தில் உள்ள புலாந்ஷார். விஜய்சிங்கின் இளைய மகன் மோகித் சிங். அவருக்கு வயது 20 ஆகும். இவர் அனுப்ஷாரில் உள்ள கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தார்.
பாம்பு கடிக்கு கங்கை நதி மருந்தா?
இந்த நிலையில், கடந்த 26ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலுக்கு அவர் வாக்களிக்கச் சென்றிருந்தார். வாக்களித்துவிட்டு அவர் திரும்பியபோது மோகித் சிங்கை பாம்பு ஒன்று கடித்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், பாம்பின் விஷத்தை முறிக்க அங்குள்ள மருத்துவர்களால் முடியவில்லை.
இதையடுத்து, மோகித் சிங்கின் உறவினர்கள் சிலர் கங்கை நதியில் அவரை நீராட வைத்தால் பாம்பின் விஷம் முறிந்துவிடும் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய மோகித் சிங்கின் குடும்பத்தினர் கங்கை நதி பாய்ந்து கொண்டிருந்த இடத்தில் இருந்த பாலத்தில், கயிறு கட்டி மோகித்தை நதியிலே படுக்க வைத்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக அவரை நதியிலே படுக்க வைத்துள்ளனர்.
இளைஞர் பரிதாப மரணம்:
ஆனால், அந்த இரண்டு நாட்களுக்கு நடுவிலே மோகித் சிங்கின் உடல் முழுவதும் பாம்பின் விஷம் ஏறி அவர் உயிரிழந்துள்ளார்.
20 वर्षीय मोहित कुमार को सांप ने काट लिया। अंधविश्वास में फैमिली वालों ने उसको 2 दिन तक गंगा में लटकाए रखा। उन्हें ऐसा बताया गया था कि गंगा के बहते जल में शरीर को रखने से जहर उतर जाता है। लेकिन मोहित जिंदा नहीं हुआ। जिसके बाद उसका अंतिम संस्कार किया गया।
— Sachin Gupta (@SachinGuptaUP) May 2, 2024
📍बुलंदशहर, उत्तर प्रदेश pic.twitter.com/JDY5XupSl1
அவர் உயிருடன் வந்துவிடுவார் என்ற மூட நம்பிக்கையில் அவரது உடலை கங்கை நதியிலே அவரது உறவினர்கள் படுக்க வைத்திருந்தனர். அவரது உடலை கயிறை கட்டி பாலத்தின் மேலே இருந்து ஒருவர் பிடித்து வைத்திருந்தார். இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார் மோகித் சிங்கின் உடலை மீட்டு முறைப்பட தகனம் செய்தனர்.
அவரது உடல் கங்கை நதியில் கயிறு கட்டப்பட்டு இருந்ததை பலரும் வேடிக்கை பார்த்தும், வீடியோ எடுத்தும் சென்றனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். இன்றளவும் மூட நம்பிக்கையால் உயிரிழந்தவர்கள் மீண்டும் உயிர் பிழைத்து வருவார்கள் என்று சில முட்டாள் தனமான சடங்குகளையும், இன்னும் சிலர் புதையலுக்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும் நரபலி கொடுப்பதையும் செய்து வருவதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இதுபோன்ற மூட நம்பிக்கைகளை முற்றிலும் மக்கள் மத்தியில் இருந்து அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.