மேலும் அறிய

Lock Up Torture : ஆசனவாயில் லத்தியைச் சொருகி மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர்.. மீண்டும் ஒரு கொடூரம்..

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரின் ஆசனவாயில் லத்தியை நுழைத்து, மின்சாரம் பாய்ச்சப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரின் ஆசனவாயில் லத்தியை நுழைத்து, மின்சாரம் பாய்ச்சப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவறான நபர் கைது:

உத்தரப்பிரதேசம் கக்ரலா பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் பகுதி நேரமாக காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இவரை சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த மே 2 ம் தேதி விசாரணைக்காக ஆலபூர் காவல்துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர். பசுவதையில் தொடர்ந்து ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு உள்ள ரவுடியுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இளைஞரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லாத நிலையில் அவரை அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். ரவுடி குறித்து கேள்வி எழுப்பிய காவல்துறையினர் இரவு முழுவதும் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து, தாங்கள் கைது செய்தது தவறான நபர் என்பதை அறிந்த காவல்துறையினர் அந்த இளைஞருக்கு 100 ரூபாயை கையில் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

Lock Up Torture : ஆசனவாயில் லத்தியைச் சொருகி மின்சாரம் பாய்ச்சிய காவல்துறையினர்.. மீண்டும் ஒரு கொடூரம்..

மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை:

வீட்டிற்கு வந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடையவே அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையின் போது இளைஞரின் ஆசனவாயில் லத்தியை சொருகி, அவ்வபோது மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்ததாகவும் அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

நரம்பு மண்டலம் பாதிப்பு:

மருத்துவமனையில் இளைஞரின் உடல்நலனை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர் மின்சார சித்ரவதையால் இளைஞரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரவீன் சிங் சவுகான் “இளைஞர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும், அவரது ஆசனவாயில் லத்தியை நுழைத்து சித்ரவதை செய்ததாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியது உண்மைதான் என்றும், இச்சம்பத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறும். அதே சமயத்தில் இளைஞருக்குத் தேவையான தரமான சிகிச்சை வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

உயர்மட்ட விசாரணை:

எஸ்எஸ்பி ஓபி சிங் தாதாகஞ்ச் சிஓ ப்ரேம் குமார் தாப்பா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை அறிக்கையில் இளைஞர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதால், காவல்துறை துணை ஆய்வாளர் சத்யபால் உள்ளிட்ட காவலர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 8342  மற்றும் 323 உள்ளிட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் நிலையங்களில் விசாரணை மரணங்கள் நடப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஆசனவாயில் லத்தியை நுழைத்து, மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்ததோடு தவறான நபரை கைது செய்து சித்ரவரை செய்ததற்காக 100 ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Aishwarya Rajinikanth:மயிலம் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
Aishwarya Rajinikanth:மயிலம் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
Embed widget