மேலும் அறிய
Advertisement
சரக்கு ரயில் மேல் ஏறிய அடையாளம் தெரியாத நபர்; உடல் கருகி பலியான சோகம்
வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மேல் ஏறிய அடையாளம் தெரியாத நபர் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மேல் ஏறிய அடையாளம் தெரியாத நபர் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள ரயில் நிலையத்தில், ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நாடு முழுவதும் ஏற்றி செல்ல சரக்கு ரயில் முனையம் செயல்பட்டு வருகிறது.
வாலாஜாபாத் சரக்கு முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மேல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏறிய நிலையில் உயர் அழுத்த மின்கம்பி உரசிய நிலையில் தீப்பிடித்து எரிய தொடங்கினார். திடீரென ரயில் மீது தீப்பிடித்து எரிந்த நபரைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் பதறியபடி கூக்குரல் இட்டனர். அதற்குள் தீ மள மளவென பரவி அடையாளம் தெரியாத நபர் உடல் முழுவதும் கருகி சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசாரும், காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து உயிரிழந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அடையாளம் தெரியாத வகையில் உயிரிழந்துள்ள நபர்,மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தால் வாலாஜாபாத் ரயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும் படிக்க:உங்கள் மகனை இப்படி நடத்துவீர்களா? பயங்கரவாதி என அழைத்த பேராசிரியருக்கு இஸ்லாமிய மாணவன் சரமாரி கேள்வி..!
மேலும் படிக்க: Delhi murder case: டெல்லி கொலை வழக்கு: ஷ்ரத்தாவின் மோதிரத்தை புதிய காதலிக்கு பரிசாக அளித்த ஆப்தாப்: வெளியான திடுக் தகவல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion