மேலும் அறிய

Crime: 17 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்.. மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது.. உளுந்தூர்பேட்டையில் பயங்கரம்

உளுந்துார்பேட்டை அருகே சிறுவனிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் மற்றும் மூன்று சிறார்கள் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் 'போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அருகே சிறுவனிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் மற்றும் மூன்று சிறார்கள் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் 'போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த புது நன்னாவரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு மகன் பூவரசன், 19; இவர் மற்றும் 15, 16, 17 வயது சிறார்கள் சேர்ந்து, 17 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றனர்.

இதையறிந்த சிறுவனின் உறவினர் அளித்த புகாரின் படி, பூவரசன் மற்றும் மூன்று சிறார்கள் மீது திருநாவலுார் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம் : 

இதேபோல், கடந்த மாதம் டெல்லியில் பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவர் 4 பேரால் கூட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் டெல்லி பெண்கள் ஆணையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆறு நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

கடந்த செப்டம்பர் 18 ம் தேதி சிறுவன் தங்கள் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருக்கும்போது 4 பேரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார். கொடுமையான துன்புறுத்தலுக்கு பிறகு அந்த 4 பேரும் சிறுவனின் பின்பகுதியில் கட்டையை உள்செலுத்தி கொடுமை படுத்தியுள்ளனர். தொடர்ந்து, கட்டை மற்றும் இரும்பு கம்பியால் சிறுவனை கொடூரமாக தாக்கி சாலையில் விட்டு சென்றுள்ளனர். 

மயக்கநிலையில் கிடந்த சிறுவனை பார்த்த அக்கம்பக்கதினர் மீட்டு பெற்றோரிடம் தகவல் தெரிவித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 22-ம் தேதி கண் முழித்த சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தயாரிடம் தெரிவித்தார். 

இதுகுறித்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்களைப் பாதுகாக்கும் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், தலைமறைவாகியுள்ள 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஒரே வயதுடைய மைனர்கள் என்று தெரிவித்தனர். 

போக்சோ சட்டம் : 

கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

18 வயதிற்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 

  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
  • Sexual Assault - பாலியல் தொல்லை
  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு
  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
  • 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget