மேலும் அறிய

இரிடியம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி; பொதுமக்கள் ஏமாற வேண்டாம் - சேலம் எஸ்.பி. அறிவுறுத்தல்

சோதனையில் 2 அம்மன் சிலைகள், 4 மான் கொம்புகள், விலைமதிப்புமிக்க திமிங்கலத்தின் எச்சம், 2 துப்பாக்கிகள், 47 அரிய வகை கற்கள் கைப்பற்றப்பட்டன.

சேலம் மாவட்டம் கிழக்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் ராதாகிருஷ்ணன் என்பவர் இரிடியம் விற்பதாக கூறி ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ஓமலூர் சர்க்கரை செட்டிப்பட்டியைச் சேர்ந்த ராஜி மற்றும் வட்டக்காடு பகுதியைச் சேர்ந்த வில்வேந்திரன் ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில், இரிடியம் விற்பதாக பணத்தை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் 2 அம்மன் சிலைகள், 4 மான் கொம்புகள், விலைமதிப்புமிக்க திமிங்கலத்தின் எச்சம், 2 துப்பாக்கிகள், 47 அரிய வகை கற்கள் கைப்பற்றப்பட்டது.

இரிடியம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி; பொதுமக்கள் ஏமாற வேண்டாம் - சேலம் எஸ்.பி. அறிவுறுத்தல்

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் கூறும்போது, கடந்த 2 மாதங்களாக ஓமலூர் பகுதியில் பண மோசடி, இரிடியம் மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ராஜீ, வில்வேந்திரன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டது. மேலும் 5 பேரிடம் பண மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்று ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அது குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களிடம் யாரேனும் ஏமாறி இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையில் புகார் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இரிடியம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி; பொதுமக்கள் ஏமாற வேண்டாம் - சேலம் எஸ்.பி. அறிவுறுத்தல்

தொடர்ந்து கூறிய அவர், இரிடியம் ரைஸ் புல்லிங், போலி கற்கள், மண்ணுளிப் பாம்பு, பணம் இரட்டிப்பு போன்ற விவகாரங்களில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், கஞ்சா விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடைய 14 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். சைபர் கிரைம் குற்றம் தொடர்பான புகார்களின் பேரில் இதுவரை ரூ.54 லட்சம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை பிடிப்பதில் சிக்கல்கள் உள்ளன. சைபர் கிரைம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளதால் புகார்கள் அதிகரித்துள்ளன. எனினும், இதுபோன்ற மோசடிகளில் சிக்காத அளவிற்கு பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்றார்.

இரிடியம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி; பொதுமக்கள் ஏமாற வேண்டாம் - சேலம் எஸ்.பி. அறிவுறுத்தல்

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கொடுத்த புகார் தொடர்பாக சட்ட ஆலோசனை கேட்டுள்ளோம். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து, கந்து வட்டி தொடர்பாக புகார்களை 94981009790, 9629390203 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என கேட்டுக் கொண்டார். கந்து வட்டி தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 வழக்குகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைப்பதற்காக, இரண்டு இடங்களில் ஸ்பீடு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட்டு குறுந்தகவல் அனுப்பபடும். இ சலான் முறை அடுத்த சில வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும். சோலார் சக்தியுடன் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 200 சாலை தடுப்பான்கள் சேலம் மாவட்டத்தில் விபத்து நிகழும் இடங்களில் வைக்கப்படும்  என்று கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget