Crime : 7-ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிறார் உட்பட இருவர் போக்சோவில் கைது
வேட்டவலம் அருகே 7-ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறார் உட்பட 2 நபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் காவல்துறையினர்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி தற்போது தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவரது தாய் வடமாநிலமான மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மாணவியை தற்போது, அவரது பாட்டி படிக்க வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் வேட்டவலம் பகுதியை சேர்ந்த மார்பின் சிரில் என்னும் ஹோட்டல் தொழிலாளி, வயது (25) சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். பின்னர் பாட்டி வீட்டில் தனியாக இருந்த மாணவி பள்ளிக்கு சென்று வரும்பொழுது மார்பின் சீரியிடுன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மார்பின் சிரில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தன் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் பேசி வரலாம் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் சிறுமியை இதைப்பற்றி வெளியே கூறினால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். பின்னர் 5 நாட்கள் கழித்து மார்பின் சிறுமியை மிரட்டி மாடிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவருடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் 17 வயது சிறுவனையும் உடன் அழைத்து சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த 17 வயது சிறுவனும், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மீண்டும் இருவரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலையில் உள்ள சைல்டு லைனிற்கு ரகசிய தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியை மீட்டு திருவண்ணாமலை உள்ள அரசு இல்லத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அன்பரசி விசாரணை நடத்தி இருவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 17 வயது சிறுவன், மற்றும் மார்பின் சிரில் ஆகிய இருவரையும் கைது செய்து 17 சிறாரை கடலூர் சிறுவர் சீர்திருத்த இல்லத்திலும், குற்றவாளி மார்ஃபினை வேலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர். 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.