மேலும் அறிய
Advertisement
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கொடூர விபத்தில் இருவர் உயிரிழந்தனர்
சென்னை கேளம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் விபத்தில் சிக்கி பலி.
ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் பயணம்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாட்ஷா (27), இவர் தற்போது ஓஎம்ஆர் சாலை படூரில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவருடன் அதே கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஹரிஷ் (19) சேர்ந்து ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தில் கோவளத்திலிருந்து கேளம்பாக்கம் நோக்கி அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து கொண்டிருந்தனர்.
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்
அப்போது இருசக்கர வாகனத்திற்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரின் வலது புறத்தில் உள்ள கதவு மீது மோதி நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளனர். அதே பிரதான சாலையில் பொருட்களை ஏற்றி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி சாலையில் விழுந்த பாஷா மற்றும் கல்லூரி மாணவர் ஹரிஷ் மீது ஏரி இறங்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை போக்குவரத்து புணர்வு போலீசார் கார் ஓட்டுனர் தியாகராஜன் மற்றும் லாரி ஓட்டுனர் இளங்கோவை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion