மேலும் அறிய
Advertisement
Crime : ’உன்னவிட நா பெரிய ரவுடி..’ : ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து பிரபல ரவுடியை கழுத்தறுத்து கொன்றவர்கள் கைது..
மூன்று பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டியது
உன்னவிட நா பெரிய ரவுடி ! நீயா நானா பெரியவர் என்ற போட்டியில் ஆண்லைனில் கத்தி ஆடர் செய்து பிரபல ரவுடியை கழுத்தறுத்து கொலை செய்த இருவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் வாலிபர் ஒருவரை வெட்டி கொலை செய்து வீசி சென்ற நிலையில் வாலிபர் சடலத்தை மீட்ட இரணியல் போலீசார் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வந்த நிலையில் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை அடுத்த நான்கு வழிச்சாலையில் இரவு ஆட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வாலிபர் ஒருவரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில் அந்த வாலிபர் அலறி சத்தம் போட்டுள்ளார்.அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த பகுதிக்கு வந்த நிலையில் வாலிபரை வெட்டிய அந்த மூன்று பேர் கும்பல் வாலிபரை அங்கேயே போட்டு விட்டு ஆட்டோவில் தப்பியோடியது.
இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து கிடந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்கள் யார் என்றும் விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த பகுதியில் உடலில் ரத்த கறையுடன் போதையில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த அசோக் என்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் தனது நண்பர் அஜின் ஜோஸும் களியக்காவிளை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ரீகன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் இருவரும் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் இதில் ரீகன் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறை சென்றுள்ளார் , ரீகன் மற்றும் அஜின் ஜோஸ் இருவரும் சேர்ந்து அடிக்கடி சுங்கான்கடை பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்துவது வழக்கம் அப்படி மது அருந்திவிட்டு போதையில் ரீகன் அஜின் ஜோஸ் ஐ நீ என்ன டா பெரிய ரவுடி நான் தான் பெரிய உன்ன விட பெரிய ரவுடி என்றும் தரக்குறைவாக பேசியதால் ரீகனை கொலை செய்தால் அவனை விட நாம் பெரிய ரவுடி ஆகிவிடலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அஜின் ஜோஸும் அசோக்கும் திட்டமிட்டுள்ளனர்.
கொலை செய்ய தேவையான கத்தியை ஆண்லைனில் ஆர்டர் செய்த அஜின் ஜோஸ் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரீகனுக்கு மது வாங்கி கொடுத்து ஆட்டோவில் சுங்கான்கடை நான்கு வழிச்சாலை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு போதை தலைக்கேறிய ரீகன் அசோக் பிடித்து வைக்க அஜின், ரீகன் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் அசோக் போலீசார் விசரானையில் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அஜின் ஜோஸ் மற்றும் அசேக் ஐ கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion