திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

ஆரணி உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் வளாகத்தில் சப்த கன்னி அம்மன் கருவறையில் இருந்த அம்மன் சிலையை 3 துண்டாக உடைத்து தூக்கி எறியப்பட்டிருப்பதால் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

FOLLOW US: 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றின் அருகே தசரத மகா சக்கரவர்த்தி புத்திர வரம் வேண்டி புத்திர பாக்கியம் பெற்ற பிரசித்தி பெற்ற அருள்மிகு புத்திரகாமீட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் மாநிலம் முழுவதிலுமுள்ள பக்தர்கள் வந்து புத்திர பாக்கியம் வேண்டி கோவிலில் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.மேலும் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் உள்ளூர் பக்தர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம் வளாகத்தில் சப்த கன்னி அம்மன் ஆலயம் 100 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது ஊரடங்கினால் பக்தர்கள் யாரும் சாமி தரிசனம் செய்ய வராத நிலையில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்த ஆலயத்தில் அம்மன் சிலைகள் 100 ஆண்டுகளுக்கு முன்பு கற்களால் அமைக்கப்பட்டு தினந்தோறும் பூஜை புனஸ்காரங்கள் நடைபெற்று வருவது வழக்கமாகும். நேற்றிரவு சமூக விரோதிகள் அந்த ஆலயத்தில் இருந்த இரும்பு கேட்டை உடைத்து ஆலயத்தின் கருவறையில் இருந்த அம்மன் சிலையை 3 துண்டாக உடைத்து அந்த சிலையை ஆலயத்தின் வளாகத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

மேலும் ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்தின் கடந்த ஆண்டு தமிழக இந்து அறநிலைத்துறை சார்பில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருமண மண்டபம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் திருமண மண்டபத்தின் கண்ணாடியும் உடைத்துள்ளனர். இன்று காலை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இது சம்பந்தமாக ஆரணி நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வந்த ஆரணி நகர காவல் நிலைய காவல்துறையினர் ஆலயத்தில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து அந்தச் சமூக விரோதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை

பக்தர் கோபி என்பவரிடம் கேட்டபொழுது, தசரத மகா சக்கரவர்த்தி புத்திர வரம் வேண்டி புத்திர பாக்கியம் யாகம் வேண்டி  ராமர் முதலான சத்புத்தரர்கள் பிறந்ததாக சொல்லப்படும் சிறப்புடையதாகும். சப்தகாரிகள் சொல்லக்கூடிய பிரம்மி,  மாகேஷ்வரி, கௌவுமாரி, வைஷ்ணவி, வாராகி இந்திராணி, சாமுன்டி என்று சொல்ல கூடிய சப்த மாதாக்கள் ஒரே கல்லில் வடித்தல் கருவறையில் உள்ள ஒரே கல்லினை சமுக விரோதிகள் சிதைத்து எடுத்துவெளியே வீசியுள்ளனர். இதுமட்டுமின்றி கோவிலுக்கு அருகாமையில் திருமண மண்டபத்தின் முன் ஜன்னல் கதவினை சமூகவிரோதிகள்  உடைத்துள்ளனர்.

திருவண்ணாமலை : கருவறை அம்மன் சிலையை உடைத்தெறிந்த சமூக விரோதிகள் : காவல்துறை தீவிர விசாரணை
கோபி

இதனால் உடைந்த  கல்லினை  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சரிசெய்து தரவேண்டும். மேலும் காவல்துறையினர் இந்த பகுதியில் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags: tvmalai temple into 3 pieces burnt sociyal enemies smashed

தொடர்புடைய செய்திகள்

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

‛பார்ட் டைம் கஞ்சா சேல்’ சூர்யா-தமன்னா கைது!

‛பார்ட் டைம் கஞ்சா சேல்’ சூர்யா-தமன்னா கைது!

PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!

PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!

”மாப்பிள்ளை பிடிக்கலையா?” : சொந்த மகளையே எரிக்கமுயன்ற பெற்றோர், சகோதரன்..!

”மாப்பிள்ளை பிடிக்கலையா?” : சொந்த மகளையே எரிக்கமுயன்ற பெற்றோர், சகோதரன்..!

Sexual Harrasment : ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் : ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி..!

Sexual Harrasment : ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் : ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!