(Source: ECI/ABP News/ABP Majha)
கொடூரம்! 14 வயது சிறுமியை குத்திக்கொன்றுவிட்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவர்!
Tripura School Student Murder: திரிபுராவில் 21 வயது கல்லூரி மாணவனால், ஒன்பதாம் வகுப்புப் மாணவி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் வடக்கு பகுதியான காஞ்சன்பூரில் 21 வயது கல்லூரி மாணவனால் பட்டப்பகலில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவமானது, ஒருதலைக் காதல் விவாகராத்தால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவி கொலை:
வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள காஞ்சன்பூரில் 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் பட்டப்பகலில் ஒன்பதாம் வகுப்பு சிறுமியை தாக்கி கொலை செய்ததாக திரிபுரா போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அளித்த தகவல்களின்படி, கொலை செய்யப்பட்ட மாணவி, நேற்று காலை 8.30 மணியளவில் காஞ்சன்பூரில் உள்ள தனியார் பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர், மாணவியை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
தனது கழுத்தை அறுத்து தற்கொலை:
வடக்கு திரிபுரா எஸ்பி பானுபதா சக்ரவர்த்தி பி.டி.ஐ செய்தி முகமையிடன் தெரிவித்ததாவது, குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி மாணவர் போஸ்ட் ஆபிஸ் சாலை அருகே தனது வழியைத் தடுத்து, பள்ளி மாணவியிடம் தனது காதல் உறவை நிராகரித்ததால், அவரது கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தினார். இத்தாக்குதலைத் தொடர்ந்து, கார்த்திக் நாத் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். அவள் ரத்தம் கொட்டிய நிலையில் தரையில் விழுந்தாள். இதையடுத்து கல்லூரி மாணவர் நாத் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார்.
இதையடுத்து, இருவரும் உடனடியாக காஞ்சன்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் நாத் மேல் சிகிச்சைக்காக தர்மநகருக்கு பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை:
காஞ்சன்பூர் அரசு பட்டப்படிப்பு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் நாத், பாதிக்கப்பட்ட பெண்ணிடம், தனது காதலை முன்மொழிந்ததாகத் தெரிகிறது. அவளுடைய நிராகரிப்பு அவனை வன்முறைச் செயலைச் செய்யத் தூண்டியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து, வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருதலைக் காதலால் , பள்ளி மாணவியை கல்லூரி மாணவர் கொலை செய்து தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Varanasi: கோயிலில் மனித மிருகம்..! 18 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை, 44 வயது நபர் கைது..!