மேலும் அறிய

Crime: மாணவிக்கு மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை...! சமூக வலைதளங்களில் வீடியோ ரிலீஸ்..! திருச்சியில் நடந்த கொடூரம்..

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அவர்களுள் ஒருவர் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.

திருச்சி, முசிறியில் பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கொடூர நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

மது கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள அந்தரப்பட்டியைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 21) என்னும் நபர், 16 வயது பள்ளி சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அவரைக் காதலிப்பது போல் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் அவரை அருகில் இருக்கும் காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து அவரை மயக்க நிலையில் ஆழ்த்தி, சிறுகாம்பூரைச் சேர்ந்த தனது நண்பர்கள் மணிகண்டன் (27) கணேஷ் (24) உள்பட ஐந்து பேருக்கு போன் செய்து அங்கு அனைவரையும் வரவழைத்துள்ளார். அனைவரும் இணைந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை தங்கள் செல்ஃபோனில் வீடியோ பதிவும் செய்துள்ளனர்.

சிறுமிக்கு குழந்தை திருமணம்

இதையடுத்து அந்தச் சிறுமியை அங்கிருந்து விடுவித்த அவர்கள், இதுபற்றி வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதோடு, தொடர்ந்து சிறுமியை அழைத்துச்சென்று மேலும் மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததை அடுத்து, கடந்த ஜூன் மாதம் அவரது படிப்பை நிறுத்தியதுடன் மாணவியின் படிப்பை நிறுத்தி கடந்த மே மாதம், திருச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமி

இதைத்தொடர்ந்து குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள், ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தற்போது சிறுமி திருச்சியில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்து வரும் நிலையில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது

.இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

2 பேர் தலைமறைவு

அதில், அவரை ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை  அடுத்து, அவர்களுள் ஒருவர் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதையடுத்து காப்பகத்தில் இருந்த சிறுமியை மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன் (21), மணி  (24), தர்மன் (25) ஆகிய நபர்களை நேற்று கைது செய்தனர்.  தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தொடர்ந்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget