மேலும் அறிய
திருச்சியில் மருத்துவ மாணவர் தூக்குமாட்டி தற்கொலை - காவல்துறை விசாரணை
முதுகலை மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா ஆர்.சி.செட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகன் இளம்சூரியன் (வயது 29). டாக்டரான இவர் திருச்சியில் உள்ள கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை (எம்.எஸ்) மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். இதற்காக மருத்துவமனை வளாகத்திலேயே உள்ள மாணவர் விடுதியில் மூன்றாவது மாடியில் தங்கி இருந்தார். இன்னும் ஒரு சில மாதங்களில் பட்ட மேற்படிப்பு முடிவடைய உள்ளது.
தூக்குப்போட்டு தற்கொலை :
இந்த நிலையில் தற்போது தேர்வு நடைபெறுவதால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் இவர் விடுதியில் உள்ள தனது அறையில் இருந்து படித்துக் கொண்டிருந்தார். நேற்று இரவு சாப்பிடுவதற்காக அவருடைய நண்பர்கள் அவரை அழைக்க சென்றனர். அப்போது அவருடைய அறை பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கி நிலையில் இருந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion