மதுபோதையில் தகராறு....கணவனை வெட்டிக்கொன்ற மனைவி தலைமறைவு - திருச்சியில் பயங்கரம்
புஷ்பராஜியின் மகன் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மல்லிகாவை தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தலைமலை அடிவாரம் ஒத்தரசு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 43). லாரி டிரைவர். இவரது மனைவி மல்லிகா (43). இந்த தம்பதிக்கு தமிழ்ச்செல்வன் (20) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் புஷ்பராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மல்லிகாவிடம் தகராறு செய்து வந்தார். அதன்படி நேற்று முன்தினம் அவர் மது அருந்திவிட்டு வந்து போதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மல்லிகா சமையல் அறையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து புஷ்பராஜியின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த புஷ்பராஜ் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். பின்னர் மல்லிகா அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அப்பகுதியினர் தொட்டியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.#Trichydistrict pic.twitter.com/3Apo4FslAc
— Dheepan M R (@mrdheepan) September 6, 2023
இதனை தொடர்ந்து புஷ்பராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புஷ்பராஜியின் மகன் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மல்லிகாவை தேடி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்