Accident: திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் கோர விபத்து; 2 பேர் உயிரிழப்பு -25 பேர் காயம்
பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடைபெற்ற விபத்தில் 25 பேர் காயமடைந்ததுடன், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது துறைமங்கலம். இங்கு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதனால், இந்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில், இந்த சாலையில் திருச்சியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம், 2 கார் மற்றும் வேன் மீது மற்றொரு கார் மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது. திடீரென நடைபெற்ற இந்த கோர விபத்தில் 2 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த சாலையில் 1 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.