மேலும் அறிய
Advertisement
சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து! வந்தே பாரத் ரயில் சேவை பாதிப்பு!
Avadi Train Accident : " பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா என்று கோணத்தில் ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை"
சென்னையை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து, பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு.
ஆவடி : இன்று காலை அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு மின்சார ரயில் சென்று கொண்டிருந்தபோது, இதில் 4 பெட்டிகள் திடீரென்று தடம்புரண்டதால் விபத்து ஏற்பட்டது. மெரினா கடற்கரை நோக்கி செல்லவேண்டிய இந்த ரயிலில் நல்வாய்ப்பாக பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் மார்கத்தில் கடந்த ஒரு மாதமாகவே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மின்சார ரயில்கள் செல்லக்கூடிய வழித்தடத்தில் தான் தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விபத்தின் காரணமாக சிக்னல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் கோளாறு காரணமாக சென்னையை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் பாதி வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா என்று கோணத்தில் ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா என்று கோணத்தில் ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ட்ரெயின் தாமதம் மாதக் கிளம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காட்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு தாமதமாக புறப்பட துவங்கியுள்ளது. இதன் காரணமாக பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். தண்டவாளத்தில் இருந்து ட்ரெயினை அப்ரூவப்படுத்தும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது .இந்த விபத்து ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion