மேலும் அறிய

திமுக எம்.எல்.ஏ., மகனின் கார் விபத்திற்கு காரணம் என்ன? பெங்களூரு போலீஸ் விளக்கம்!

பெங்களூரு கோரமங்களாவில் நடந்த கொடூர விபத்தில் ஆடி கார் கட்டுப்பாடு இழந்து, சாலையோரத் தடுப்புகளிலும் கட்டடம் ஒன்றை இடித்து நின்றதில், திமுக எல்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பெங்களூரு கோரமங்களாவில் நடந்த கொடூர விபத்தில் ஆடி கார் கட்டுப்பாடு இழந்து, சாலையோரத் தடுப்புகளிலும் கட்டடம் ஒன்றை இடித்து நின்றதில், 20 முதல் 30 வயது வரை உட்பட்ட 7 பேர் பலியாகினர். திமுகவைச் சேர்ந்தவரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர் இந்த விபத்தில் பலியாகினார். இஷிடா, தனுஷ், அக்‌ஷய் கோயல், ரோஹித் என்ற மற்ற பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். 

சாலைப் பாதுகாப்பு இணை காவல் ஆணையர் ரவிகந்தே கௌடா இந்த விபத்து குறித்து அளித்த பேட்டியில், ”7 பேர் பயணித்த சொகுசு ஆடி கார் ஒன்று, வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து நள்ளிரவு சுமார் 1.45 மணிக்கு அங்கிருந்த கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் முழுவதும் உடைந்து நொறுங்கியுள்ளது. காரில் பயணித்த யாருமே சீட் பெல்ட் அணியாததால், அதில் இருந்து ஏர் பேக் எதுவும் திறக்கவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அவர் விபத்து நடந்த இடத்திலேயே 6 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த 15 நிமிடத்தில் சாலைப் பாதுகாப்பு காவல்துறையினர் கூடி, உயிருடன் இருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். 

திமுக எம்.எல்.ஏ., மகனின் கார் விபத்திற்கு காரணம் என்ன? பெங்களூரு போலீஸ் விளக்கம்!
Audi Q3 35 TDI Quattro

 

விபத்திற்குள்ளான காரில் இருந்த வசதிகள் என்ன?

5 சீட்களைக் கொண்டுள்ள Audi Q3 35 TDI Quattro கார் சுமார் 40 லட்ச ரூபாய் விலை மதிப்பு கொண்டது. இதில் 4 ஏர் பேக் வசதி உண்டு. எனினும், காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால், காரைப் பொறுத்த வரை, யாரும் பயணிக்கவில்லை என்று புரிந்துகொள்ளப்பட்டு, விபத்து நேர்ந்தால் ஏர் பேக் எதுவும் திறக்காது. சீட் பெல்ட் போடப்பட்டிருந்தால், விபத்து நேரும் போது, ஏர் பேக் திறந்து காரின் மற்ற பகுதிகளின் மேல் பயணிகள் மோதாமல் பாதுகாக்கும். இதன் மூலம் பயணிகள் பாதுகாப்புடன் விபத்தில் இருந்து உயிருடன் தப்பிக்க முடியும். மேலும் 4 பேர் பயணிக்க வேண்டிய வாகனத்தில் 6 பேர் பயணித்திருப்பதும் இந்த விபத்து நேர்வதற்குக் காரணமாக இருந்துள்ளன. கவனமின்றி வாகனத்தை இயக்கியதால், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக எம்.எல்.ஏ., மகனின் கார் விபத்திற்கு காரணம் என்ன? பெங்களூரு போலீஸ் விளக்கம்!

பொதுப் பாதையில் கவனமற்று பயணித்ததற்காக 279வது சட்டப்பிரிவு, கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் 304வது சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ”முதல் கட்ட விசாரணையின்படி, இந்த விபத்தின் காரணம் அதீத வேகமும், கவனக்குறைவுடன் வாகனத்தை இயக்கியதும் ஆகும். வாகனத்தை ஓட்டியவர் மது அருந்தியிருந்தாரா என்பது உடல் கூராய்வுக்குப் பிறகு தெரிய வரும்” என்று காவல் ஆணையர் ரவிகந்தே கௌடா தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget