மேலும் அறிய

தீப மை வேண்டுமென்றால் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும் - அண்ணாமலையார் கோவில் பெயரில் போலி கணக்கு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பெயரைச் சொல்லி சமூக வலைதளங்களில் கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்தாண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து 11 நாட்கள் எரிந்து டிசம்பர் 16ஆம் தேதி மலை மீது இருந்து மகா தீப கொப்பரை கோவில் ஊழியர்களால் சுமந்தவாறு அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொப்பரையிலிருந்து நெய் சேகரிக்கப்பட்டு அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து தீப மையானது தயார் செய்யப்பட்டது.

தீப மை வேண்டுமென்றால் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும் -  அண்ணாமலையார் கோவில் பெயரில் போலி கணக்கு

ஆருத்ரா தரிசனமான நேற்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தீப மையானது ஆருத்ரா தரிசன தினமான இன்று நடராஜ பெருமானுக்கு நெற்றியில் திலகமிட்ட பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தீப மையானது விரைவில் பக்தர்களுக்கு வழங்க உள்ள நிலையில் அதற்குள்ளாகவே பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மர்ம நபர்கள் அண்ணாமலையார் கோவில் பெயரில் போலியான கணக்குகள் உருவாக்கி தீப மை வேண்டுமென்றால் இன்பாக்ஸில் தகவல் தெரிவிக்கவும் என தீப மை புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றனர். 

தீப மை வேண்டுமென்றால் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும் -  அண்ணாமலையார் கோவில் பெயரில் போலி கணக்கு

இது குறித்து கோவில் அலுவலகரிகளின் வட்டாரத்தில் தெரிவிக்கையில்; சமூக வலைதளத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், மர்ம நபர்கள் யாரோ பணம் சம்பாதிக்கும் நோக்கில் இதுபோன்று போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளதாகவும் , மேலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், அண்ணாமலையாரின் பிரசாதமான தீப மை பக்தர்களுக்கு வேண்டுமென்றால் நேரடியாக கோயிலுக்கு வந்து பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவில் பெயரில் போலியான கணக்கை உருவாக்கி பக்தர்களிடமும் பொதுமக்களிடமும் பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள் மீது விசாரணை நடத்திட வேண்டும் என்றும், அவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக விடுத்துள்ளனர். அண்ணாமலை கோவிலின் பெயரில் போலி கணக்குகளை‌ உருவாக்கி உள்ள சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

EDII Entrepreneurship Camp: அரசு சார்பில் தொழில்‌ முனைவோர் விழிப்புணர்வு முகாம்‌; கலந்துகொள்வது எப்படி? விவரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்புPongal Gift :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Pongal Release : கல்லா கட்டப்போவது யார் ? இந்த பொங்கலுக்கு இத்தனை படங்களா ?
Pongal Release : கல்லா கட்டப்போவது யார் ? இந்த பொங்கலுக்கு இத்தனை படங்களா ?
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Embed widget