EDII Entrepreneurship Camp: நீங்களும் பிசினஸ் மேன் ஆகலாம்... அரசு தரும் சூப்பர் டிப்ஸ்.. விவரம்
சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் ஜனவரி 9 அன்று தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் ஜனவரி 9 அன்று தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளதாவது:
தொழில் முனைவோர் மேம்பாடு:
’’சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் 09.01.2023 அன்று தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சுயமாகத் தொழில் தொடங்க விரும்பும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
முதல் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இந்த முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்டப்
பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.
அரசுத்திட்டங்கள்:
அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது.
இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
குறிப்பு - மேலே உள்ள தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு ஆர்வமுள்ள நபர்களுக்கு பயன் பெற வழிவகை ஏற்படுத்தி தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி எண்: 044-22252081, 044- 22252082,
கைபேசி எண்கள்: 96771 52265, 8668102600’’.
இவ்வாறு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Rural Skill Development Scheme: 70% பேருக்கு வேலை உத்தரவாதம்.. அரசு வழங்கும் இலவச திறன் பயிற்சி.. எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
KVB Job Vacancy: வங்கி வேலை வேண்டுமா? பிரபல தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு; முழு விவரம்!