மேலும் அறிய

திருவண்ணாமலையில் வழிப்பறி கொள்ளையில் பிரச்னை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

திருவண்ணாமலையில் 4க்கும் மேற்பட்ட தரப்பினர் வழிப்பறி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2 பேர் வெட்டுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த கிளியாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் வயது (27). அதேபோன்று திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் வயது (24). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பச்சையப்பனும், அஜித் ஆகிய இருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பச்சையப்பன் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த சுமார் 4 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் பச்சையப்பனை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர். அதனை அவர் தடுத்தபோது அவரது கையில் அரிவாளால் வெட்டு விழுந்து உள்ளது. 

 


திருவண்ணாமலையில் வழிப்பறி கொள்ளையில் பிரச்னை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

பின்னர் சுதாரித்துக் கொண்ட பச்சையப்பன் அருகில் உள்ள கடைக்குள் ஓடி மறைந்துக்கொள்ள சென்றார். அப்போது அந்த மர்ம நபர்கள் பச்சையப்பன் மறைந்த இடத்தை கண்டதும் பச்சையப்பனை ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பச்சையப்பனுக்கு தலையில் வெட்டு விழந்தது. இதனால் பலத்த காயம் ஏற்பட்டது. அதபோன்று அஜித் என்பவர் அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதிக்கு அருகே வரும் பொழுது இதே கும்பலை சேர்ந்த மர்ம நபர்கள் அஜித்தையும் வழிமறித்து அரிவாளால் கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் அஜித்திற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள நபர்கள் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சையப்பனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 


திருவண்ணாமலையில் வழிப்பறி கொள்ளையில் பிரச்னை - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

 

மேலும், மருத்துவமனையில் பச்சையப்பனுக்கு தலை மற்றும் கைப்பகுதியை சேர்த்து என மொத்தம் 20-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவித்தனர். வெட்டுக்காயம் அடைந்த அஜித்தையும் போலீசார் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இவர்களுக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு வாலிபாரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் வட்டாரத்தில் கூறுகையில், திருவண்ணாமலையில் 4-க்கும் மேற்பட்ட தரப்பினர் வழிப்பறி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget