மேலும் அறிய

கஞ்சா எனக்கூறி மாட்டு சாணம் விற்பனை - திருப்பூரில் 4 இளைஞர்கள் கைது

திருப்பூரில் கஞ்சா எனக்கூறி மாட்டு சாணத்தை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் மாட்டு சாணத்தை கஞ்சா எனக் கூறி விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சமூகத்தின் நஞ்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்தல், போதைப்பொருட்களை பறிமுதல் செய்தல் மற்றும் கண்காணிப்பு பணிகள் என காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் - மங்களம் சாலையில் உள்ள பழக்குடோன் என்ற பகுதியில், மத்திய காவல் நிலைய ரோந்து காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடம் கஞ்சா போன்ற பொட்டலம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்களது பெயர் லோகநாதன் (22), உமா மகேஸ்வரன் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் காவல் துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில், மங்கலம் சாலையில், 33 ஆயிரம் ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், எடை அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்து பிரித்து பார்த்த போது, மாட்டு சாணம், வைக்கோல் கலந்து கஞ்சா என விற்று மோசடி செய்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் கேவிஆர் நகரை சேர்ந்த சாரதி (21), கவின் (22) ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். லோகநாதன், உமா மகேஸ்வரன், சாரதி, கவின் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். பின்னர் 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்  துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து  பொதுமக்கள் தயங்காமல் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். திருப்பூரில் கஞ்சா எனக்கூறி மாட்டு சாணத்தை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
Embed widget