மேலும் அறிய
Advertisement
திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் கத்தியுடன் நுழைந்த நபர்...பட்டப்பகலில் நடந்தேறிய சம்பவம்
ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அரசு அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் கூறி கத்தியை காட்டி கொலை மிரட்டல்.
திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் கத்தியுடன் வந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அரசு அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் கூறி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம்
திருப்போரூர் (Thiruporur ) : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெங்கடேசன் என்பவர் நில அளவை வட்டத் துணை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பட்டிபுலம் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவர் அலுவலகத்துக்குள் புகுந்து திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளரை சந்திக்க வந்ததாக கூறப்படுகிறது. இதில் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் புல உதவியாளரிடம் வருவாய் ஆய்வாளரை சந்திக்க வேண்டும் இங்கு இருக்கிறார் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அதிகாரிகள் மீட்டிங்கில் இருப்பதாக கூறியதாகவும் இதனால் இருவருக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நீ யாருடா என்ன கேட்க..
இந்நிலையில் திருப்போரூர் நில அளவை வட்டத் துணை ஆய்வாளர் வெங்கடேசன் என்பவர் பட்டுப்புலம் பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவரை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, அரசு அதிகாரி என்றும் பாராமல் தனசேகர் நில அளவை வட்டத் துணை ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் கூறி, நீ யாருடா என்ன கேட்க என்று பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை அதிகாரி மூஞ்சியில் வீசி, ‘நீ வெளியே வா உன்னை கொலை செய்து விடுகிறேன்’ என்று கூறியதாகவும் காவல் நிலையம் சென்றால் காவல் நிலையத்தை கொளுத்தி விடுவேன் என்று மிரட்டல் விட்டு தாக்க முற்பட்டதாகவும், பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்ற வெங்கடேசன் சிறிது நேரத்தில், கையில் கத்தியுடன் வந்து வட்டாட்சியர் அலுவலகம் வெளியே உள்ள கானாடி கதவுகளை கத்தியால் அடித்து உதைத்து, பொதுமக்கள் மத்தியில் கத்தியை காட்டி, அலுவலக வெளி வளாகத்தில் கத்தியுடன் வளம் வந்து சுற்றி வந்த தனசேகர், நில அளவை வட்டத் துணை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் புல உதவியாளர் இருவரையும் நீங்கள் வெளியே வாருங்கள் உங்களை கொலை செய்து விடுகிறேன் என்று கூறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணை
பின்னர் திருப்போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்த தனசேகர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் நில அளவை வட்டத் துணை ஆய்வாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion