மேலும் அறிய
சிறுமியை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு- 60 வயது காமக்கொடூரன் கைது
மகள் விளையாட சென்றவள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், மகளைத் தேடி அவரது தாய் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்
ஜோலார்பேட்டை அருகே சிறுமியை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது காமக்கொடூரன் கைது செய்யப்பட்டான்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(63). பீடி சுற்றும் தொழிலாளி. இவர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தனது மகள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
நேற்று மகள் வீட்டுக்கு சென்ற அவர், அருகே விளையாடிக் கொண்டிருந்த அதே தெருவை சேர்ந்த 10 வயது சிறுமியிடம் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தார். மற்றவர்கள் பார்வைக்கு தாத்தா பேத்தி என்ற உறவில் இருப்பதுபோன்று அவரது நடவடிக்கை இருந்தது.
அப்போது அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்த காமக்கொடூரன் தங்கவேல், சிறுமியை மறைவுக்கு அழைத்துச் சென்று கைகால்களை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மகள் விளையாட சென்றவள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், மகளைத் தேடி அவரது தாய் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது மறைவில் சிறுமி அழும் குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தங்கவேல் சிறுமியிடம் அத்துமீறியது தெரிந்தது.
இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
மதுரை
அரசியல்
திரை விமர்சனம்
சென்னை





















