மேலும் அறிய

ஃபேக் ஐடி பரிதாபம்!டேட்டிங் செயலியில் உருகி உருகி காதல்! நேரில் அழைத்து பணத்தை பறித்த கும்பல்!

டிண்டர் செயலியில் இளைஞரிடம் பெண் போல பேசி பழகி, அவரிடம் இருந்து 55 ஆயிரம் பணத்தை மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜூனாகத் மாவட்டம். இந்த பகுதியில் வசித்து வரும் 28 வயதான இளைஞருக்கு டேட்டிங் செயலியான டின்டர் மூலமாக பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு நெருக்கமாகியுள்ளது. இதையடுத்து, அந்த பெண் 28 வயதான அந்த இளைஞரைச் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.

அந்த இளைஞரும் தனது தோழியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கஞ்சிவாட பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே சென்ற பிறகு அந்த பெண் அவரை காசர்-இ-கவாஜா குடியிருப்புக்கு அழைத்துள்ளார். ஆர்வத்துடன் தனது தோழியை பார்க்க சென்ற அந்த இளைஞனுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. இத்தனை நாட்களாக அவருடன் பெண் போல பேசி பழகி வந்தது ஒரு ஆண் என்பதை கண்ட அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஃபேக் ஐடி பரிதாபம்!டேட்டிங் செயலியில் உருகி உருகி காதல்! நேரில் அழைத்து பணத்தை பறித்த கும்பல்!

ஆனால், அந்த இளைஞரை ஏமாற்றி பழகி வந்த ஆணுடன் மூன்று நபர்கள் அங்கே இருந்தனர். அவர்கள் கதவை அடைத்து இந்த இளைஞரை வெளியே செல்லவிடாமல் தடுத்ததுடன், அவர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த கட்டையால் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த இளைஞரை கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல், தங்களது வங்கிக்கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யுமாறும் மிரட்டியுள்ளது.

இதனால், பயந்து போன அந்த இளைஞர் கூகுள் பே மூலமாக 31 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். மேலும், அந்த இளைஞரை மிரட்டி அவரது ஏ.டி.எம். கார்டை பறித்த அந்த கும்பல் அதில் இருந்தும் ரூபாய் 24 ஆயிரத்தை எடுத்துள்ளது. இளைஞரிடம் இருந்து ரூபாய் 55 ஆயிரத்தை பறித்த அந்த கும்பல், அந்த இளைஞரை அங்கிருந்து விரட்டி அனுப்பியுள்ளது. பின்னர், தப்பி வந்த அந்த இளைஞர் தனது நண்பருடன் சென்று காவல்துறையில் புகார் அளித்தார்.

ஃபேக் ஐடி பரிதாபம்!டேட்டிங் செயலியில் உருகி உருகி காதல்! நேரில் அழைத்து பணத்தை பறித்த கும்பல்!

இதையடுத்து, போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் கஞ்சிபட் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த நான்கு இளைஞர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். சந்தேகத்தின்பேரில் அந்த நான்கு பேரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் டின்டர் செயலி மூலம் இளைஞரை ஏமாற்றி ரூபாய் 55 ஆயிரம் பறித்ததை அந்த நான்கு இளைஞர்களும் ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சர்பராஸ் புகாரி ( வயது 29). அர்பாஸ் ப்ளோஸ் ( வயது 18), இர்பான் சங்கி ( வயது 30) மற்றும் இஜாஸ் ரபாய் ( வயது 27) ஆகிய நான்கு பேரிடம் இருந்து ரூபாய் 43 ஆயிரத்து 800 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். டின்டர் செயலி மூலமாக பெண்போல பழகி மர்மகும்பல் ரூபாய் 55 ஆயிரம் வரை ஏமாற்றி பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget