திருவண்ணாமலை: காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு: கைதான வாலிபர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு
பெங்களூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசி விட்டு திருவண்ணாமலை ஆசிரமத்தில் தங்கி இருந்த வாலிபரை போலீசார் பிடித்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதல் செய்து வந்த நிலையில் அந்த இளம்பெண்ணை அவரது அலுவலகத்திற்கு சென்றும், அவரது வீட்டிற்கு சென்றும் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என்று மிரட்டியதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நாகேஷின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து இளம்பெண் மீது நாகேஷ் வீசி விட்டு தப்பித்து தலைமறைவானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் குற்றவாளியின் புகைப்படம் அடங்கிய தகவல்கள் குறித்து திருவண்ணாமலை நகரம் கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடப்படும் குற்றவாளி என்று நோட்டீஸ் ஒட்டி தீவிரமாக தேடி வந்தனர்.
கிரிவலப்பாதையில் உள்ள தனியார் ஆசிரமத்திற்கு குற்றவாளி அடிக்கடி தியானத்திற்கு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி இன்று போலீசார் மாற்று உடையில் தியான மண்டபத்திற்குள் நுழைந்து காவி வேடம் அணிந்து தியானத்தில் ஈடுபட்ட குற்றவாளியான நாகேஷ் கைது செய்து கர்நாடக மாநிலத்திற்கு அழைத்து சென்ற நிலையில் அப்பொழுது கெங்கேரி மேம்பாலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது சிறுநீர் கழிப்பதற்கு வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் பெங்களூரு நகரில் உள்ள கெங்கேரி பாலத்தில் போலீசார் வேலைநிறுத்த மறுத்தனர். அப்போது நாகேஷ் வேலையில் இருந்து திடீரென்று குதித்தார். அவரை பிடிக்க சென்ற போலீஸ்காரர் மகாதேவய்ய மீது கல்லெறிந்து நாகேஷ் தப்பிக்க முயற்சித்தார்.
அப்போது நாகேஷை ஆய்வாளர் பிரசாந்த் எச்சரித்துள்ளார். வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சரணடையுமாறு ஆய்வாளர் கூறினார். ஆனால் ஆய்வாளர்கள் எச்சரிக்கையில் இருந்து மீண்டு நாகேஷ் தப்பிக்க முயற்சி செய்ததால் அவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது பின்னர் காவல்துறையினர் அவரை பி ஜிஎஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு காலில் பட்டு போட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கல் வீச்சில் காயமடைந்த போலீஸ்காரர் மகாதேவியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.