மேலும் அறிய
நாகையில் ஓசியில் மதுபானம் கேட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது
ஆட்சியர் உத்தரவின்படி, கீழ்வேளூர் போலீசார் அந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டவர்கள்
கடந்த மாதம் 24 ஆம் தேதி தேவூரில் உள்ள அரசு மதுபான கடையில் அரிவாளை காட்டி ஓசியில் மதுபானம் கேட்ட அஜித்குமார், தமிழ்க்குடிமகன், புகழேந்திரன், மணிமாறன் ஆகிய 4 பேரையும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது பல வழக்குகள் உள்ளதால் குண்டத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் பகுதியை சேர்ந்த அஜித்குமார், ராதாமங்கலம் எறும்புக்கண்ணி சேர்ந்த தமிழ்க்குடிமகன், புகழேந்திரன், பட்டமங்கலம் புழுதிக்குடியை சேர்ந்த மணிமாறன் ஆகிய 4 பேரும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தேவூர் ஊராட்சி சந்தைப்பேட்டையில் டாஸ்மாக் கடைக்கு சென்று அரிவாளை காட்டி மிரட்டி ஓசியில் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை ஏலம் எடுத்து நடத்தி வரும் செந்தில் என்பவர், 4 பேரையும் சமாதானம் செய்ய முயன்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து கீழ்வேளூர் போலீசில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் விஜயகுமார் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் 24ம் தேதி இரவு செந்திலின் உறவினரான, தேவூர் காந்தி நகரை சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.

இது தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் அஜித்குமார், தமிழ்க்குடிமகன், புகழேந்திரன், மணிமாறன் ஆகிய 4 பேரையும் கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளதால் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜூக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்படி, கீழ்வேளூர் போலீசார் அந்த 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement