(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: தூத்துக்குடியில் ரூ.32 கோடி மதிப்பிலான அம்பர் க்ரீஸ் பறிமுதல் - முன்னாள் அதிமுக கவுன்சிலர் கைது
ஆல்கஹால் கலந்த வாசனைத் திரவியங்களை மதிப்பூட்டப்பட்ட வாசனை திரவியங்களாக மாற்ற இந்த அம்பர் உதவுகிறது. மிக விலை உயர்ந்த பெர்பியும்களில் அம்பர் சிறிதளவாக கலந்திருப்பார்கள்.
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட சுமார் 30 கோடி மதிப்புள்ள 18 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிசை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் நறுமண பொருள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் திமிங்கலம் எச்சமான தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீசை தூத்துக்குடியில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிசை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அணில், ஆனந்தராஜ், பெத்தேன், ஆகிய நான்கு பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்து ஆம்பர் கிரிசை பறிமுதல் செய்தனர் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரிசின் மதிப்பு ரூபாய் 30 கோடி என கூறப்படுகிறது.தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீசை பதுக்கி விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பர் கிரீஸ் என்பது கடலில் வாழும் திமிலங்கள் உமிழக்கூடிய மெழுகு போன்ற ஒரு பொருளாகும்.திமிங்கிலங்கள் மற்ற மீன்களுடன், கணவாய் மீன்களையும் விரும்பி உண்ணும். அப்படி உண்ணும் மீன்களின் கூறிய முட்கள் திமிங்கலத்தின் உணவுப் பாதையை குத்தி விடும். இந்த முள்ளை வெளியே எடுப்பதற்காக திமிங்கலம் வாந்தி எடுக்கும். அப்போது வெளிவரும் திரவமே அம்பராகும்.இந்த திரவம் தண்ணீரில் கரையாது. இந்த இயற்பியல் பண்பினால் அது கடல் நீரில் மிதக்கிறது. ஆல்கஹாலில் கரையும் தன்மை கொண்டது. ஆல்கஹால் கலந்த வாசனைத் திரவியங்களை மதிப்பூட்டப்பட்ட வாசனை திரவியங்களாக மாற்ற இந்த அம்பர் உதவுகிறது. மிக விலை உயர்ந்த திரவியங்களாக மாற்ற இந்த அம்பர் உதவுகிறது. மிக விலை உயர்ந்த பெர்பியும்களில் அம்பர் சிறிதளவாக கலந்திருப்பார்கள்துபாய் உள்ளிட்ட நாடுகளில் நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர். மிகவும் மதிப்பு கொண்ட அம்பர் கிரீஸ் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ரூ.1 கோடிக்கு விலை போகிறது. இந்தியாவில் வன உயரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அம்பர் கிரீஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..