மேலும் அறிய

கந்துவட்டி தொல்லையால் முன்னாள் அமமுக மாவட்ட செயலாளர் தூக்குபோட்டு தற்கொலை..!

அவரிடம் இருந்து கைப்பற்றிய கடிதத்தையும் ஆய்வு செய்த போலீசார், அதில் கந்து வட்டியால் தான் தான் தற்கொலை செய்து கொண்டு உள்ளேன் என்றும் எழுதிவைத்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் முன்னாள் அ .ம. மு. க மாவட்ட செயலாளர் தர்பாராண்யம், கந்துவட்டி தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
காரைக்கால் மாவட்டம் அடுத்த திருநள்ளாறு தெற்கு பேட் தேனூரைச் சேர்ந்தவர்  தர்பாராண்யம் (வயது52). இவர் காரைக்கால் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளராக இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருநள்ளாறு தொகுதியில் வேட்பாளராக நின்றார். மேலும், கட்சியில் பல லட்சம் செலவும் செய்து இருந்ததால் பெரும் கடனுக்கு உள்ளானார். இதனால் வேட்பாளராக இருந்த நிலையில் திடீரென்று அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். அதிலும், அதிகப்படியான கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தினசரி கடன் கொடுத்தவர்கள், தர்பாராண்யத்திற்கு போன் செய்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நேரில் வந்து வீட்டில் உள்ள பெண்களை இழிவுபடுத்தி பேசி கடன்காரர்கள் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கந்துவட்டி தொல்லையால் முன்னாள் அமமுக மாவட்ட செயலாளர் தூக்குபோட்டு தற்கொலை..!
 
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த தர்பாரண்யம் வீட்டு அறையில் மின்விசிறியில் மின் ஒயர் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த அவரது மனைவி இளவரசி அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசாரை அழைத்து  உடலை இறக்கி சோதனை செய்ததில், அவரது பாக்கெட்டில் 14 பக்கம் கடிதம் சிக்கியது. அதனை அடுத்து போலீசார் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இளவரசி இது குறித்து திருநள்ளாறு காவல்நிலையத்தில் கந்துவட்டி கொடுமையால் தான் என் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றிய கடிதத்தையும் ஆய்வு செய்த போலீசார் அதில் கந்து வட்டியால் தான் தான் தற்கொலை செய்து கொண்டு உள்ளேன் என்றும் எழுதிவைத்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்  கந்துவெட்டியால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்  காரைக்கால் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
 
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
கலெக்டர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் அதிரடி! மயிலாடுதுறையில் 29 வாகனங்கள் பறிமுதல்..! 
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget