மேலும் அறிய

Crime: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தை

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  காவல் நிலையம் முன்பு பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தெற்குக்காடு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரது மகள் அருணா(20). இவர் பி.ஏ எகனாமிக்ஸ் படித்து வருகிறார். இன்னும் ஆறு மாதத்தில் படிப்பு இவருக்கு முடிகிறது. இந்தநிலையில் அருணாவும் அதே பகுதியில் வசிக்கும் பால்சாமி என்பவரது மகன் மதன்ராஜ் (35) என்பவரும் சுமார் 4 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களது காதல் குறித்தும் இருவரது பெற்றோருக்கும் தெரிந்துவந்துள்ளது. இதனால் இரு வீட்டாரும் பேசி இன்னும் ஆறு மாதத்தில் அருணாவின் படிப்பு முடிந்ததும்  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் வாலிபர் மதன்ராஜ் அருணாவை பலமுறை ஹோட்டலில் அறை எடுத்து எடுத்து தங்க வைத்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மதன் ராஜ் வெளிநாடு சென்று விட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஊருக்கு வந்தவுடன் அருணாவுடன் வழக்கம்போல் பழகிய மதன்ராஜ் கடந்த எட்டாம் தேதி அருணாவுடன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது
Crime: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தை

அதன் பின்னர் மறுநாள் 9 ந்தேதி ஞாயிறுக்கிழமை வாலிபர் மதன்ராஜ் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்ய தனது உறவினர்களுடன் சென்று பெண் பார்த்து வந்துவிட்டு வந்து இளம்பெண் அருணாவிடம் 'நான் எனது அக்கா அத்தான் சொல்கிற பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். உன்னை திருமணம் செய்ய மாட்டேன். நான் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்ய போகிறேன்.. நீ செத்து போயிடு..' என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அருணா, வாலிபர் மதன்ராஜுடன்  இருக்கும் புகைப்படங்களை  முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவும் செய்ய வில்லை எனவும் சம்பந்தப்பட்ட மதன்ராஜை கைது செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 5 தினங்களாக மன உளைச்சலில் இருந்த அருணா அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையம் வந்து அலைந்து திரிந்துள்ளனர். 

Crime: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற தந்தை

இந்தநிலையில் நேற்று 6-வது நாளாக முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையம் வந்த அருணா மற்றும் உறவினர்கள் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை நகல் தரும்படி கூறியுள்ளனர். ஆனால் அங்கு இருந்த மகளிர் போலீசார் உரிய பதிலை கூறாமல் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அருணா மற்றும் அவரது உறவினர்கள் மகளிர் காவல் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்குவந்த டிஎஸ்பி விவேகானந்தன் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மகளிர் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் உடன் வழக்கு பதிவு செய்து எப்ஐஆர் நகல் தருகிறோம் தலைமறைவாக உள்ள மதன் ராஜை இன்னும்  இரண்டு நாளில் கைது செய்துவிடுகிறோம் என்று உறுதி கூறினார்கள். முன்னதாக முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த அருணா அவர் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வந்தபோது அருணாவின் தந்தை திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
ABP Premium

வீடியோ

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?
Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
MK Stalin Warns KO Thalapathi |
Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்
Jothimani |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
American Warship Iran Houthi : நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
India-EU Trade Deal: குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
Embed widget