குடும்பத்தினருடன் சேர்ந்து காதலியை அடித்து, ஆடைகளை அவிழ்த்து, மரத்தில் கட்டி வைத்த காதலன்: என்ன நடந்தது?
அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணுடன் காதல் இருந்ததாகத் தெரிகிறது. இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட, அந்தப் பெண்ணுக்கு பாடம் கற்பிக்க அவரது தந்தையும் அவரது தந்தையின் இரண்டு மனைவிகளும் சதித்திட்டம் தீட்டியுள்ளார்கள்
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் காதல் விவகாரம் காரணமாக, காதலனின் குடும்பம் 26 வயது பெண் ஒருவரை ஆடைகளை கழற்றி, மரத்தில் கட்டிவைத்து அடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பெண்ணை அடித்து மரத்தில் கட்டி வைத்த குடும்பம்
அந்த பெண்ணின் காதலர், காதலரின் தந்தை, தாய் மற்றும் மாற்றாந்தாய் உட்பட நான்கு பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை முதலில் தாக்கி, ஆடைகளை அவிழ்த்துவிட்டு, மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பிறகு, காவல்துறையினரால் அவர் மீட்கப்பட்டு, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் செய்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் சாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. அந்த பெண் ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை ஏற்பட, அந்த பெண்ணுக்கு பாடம் கற்பிப்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
திட்டம் தீட்டி அழைத்த காதலன்
“முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணுடன் காதல் இருந்ததாகத் தெரிகிறது. இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட, அந்தப் பெண்ணுக்கு பாடம் கற்பிக்க அவரது தந்தையும் அவரது தந்தையின் இரண்டு மனைவிகளும் சதித்திட்டம் தீட்டியுள்ளார்கள். அதன்படி, புதன்கிழமை இரவு அந்த பெண்ணை அவரது வீட்டிற்கு அழைக்கும்படி அவர்கள் அந்த காதலனிடம் கேட்டுக்கொண்டனர்,” என்று பகோதர் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) நௌஷாத் ஆலம் கூறினார்.
கட்டிற்குள் அழைத்து சென்ற குடும்பம்
காதலன் அழைப்பை ஏற்று அந்த பெண் வீட்டை அடைந்ததும் அந்த நான்கு பேரும் சேர்ந்து, அவரை காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். “அந்த அந்த பெண் தாக்கப்பட்டு உடைகள் கிழிக்கப்பட்டன. பின்னர், அந்த பெண்ணின் கிழிந்த ஆடைகளின் துண்டுகளுடன் அரை நிர்வாணமாக ஒரு மரத்தில் கட்டி வைக்கப்பட்டார், மேலும் அவர் ஒரே இரவில் இறந்துவிடுவார் என்று கருதி அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர் ”என்று போலீஸ் அதிகாரி கூறினார். மீட்கப்பட்ட பிறகு, அந்த பெண் நடந்த சம்பவத்தை போலீசில் கூறினார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் பெண்கள் நிர்வாண ஊர்வலம்
மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லும், மே 4 அன்று எடுக்கப்பட்ட வீடியோ வைரலான சில நாட்களுக்குப் பிறகு, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், மணிப்பூர் வீடியோ முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரம் அரசியல் தளத்தையும் எட்டியது, இதனால் மணிப்பூர் நிலை குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிடக் கோரி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை உலுக்கினர். ஜூலை 20-ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே பிரதமர் மோடி, வீடியோவில் உள்ள குற்றவாளிகள் தப்பவிட மாட்டோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருந்தார். மணிப்பூர் விவகாரத்தில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒவ்வொரு நாளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.