மேலும் அறிய

போதையில் இருந்த சரத்குமார்... காலையில் எழுந்ததும் அதிர்ச்சி - நடந்தது என்ன?

குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள மறுநாள் காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்: குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து கொள்ள மறுநாள் காலை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இளம் தம்பதியின் தற்கொலைக்கு பின்னணியாக இருந்தது போதைதான். காதலித்து திருமணம் செய்த இந்த இளம் தம்பதியின் தற்கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேப்பன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (34).  லாரி டிரைவர். இவரது மனைவி மோகனசுந்தரி (27). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. லாரி டிரைவர் என்பதால் நகரத்திற்கு அருகில் வசிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்து திருமணத்திற்கு பிறகு சரத்குமார் மற்றும் மோகனசுந்தரி இருவரும் தஞ்சை மாரியம்மன்கோவில் காமாட்சியம்மன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சரத்குமார் தனது மாமியார் வீடான திருவாரூர் மாவட்டம் நெப்புகோவில் பகுதிக்கு மனைவி மோகனசுந்தரியுடன் சென்று ஒரு வாரம் தங்கினார். பின்னர் இருவரும் தஞ்சையில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை சரத்குமார் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மோகனசுந்தரி தட்டி கேட்டார். சரத்குமாருக்கு இதனால் கோபம் ஏற்பட்டு மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அன்றைய தினம் இரவில் இருவரும் வீட்டில் தூங்கினர். ஆனால் கணவர் குடித்துவிட்டு வருவது பிடிக்காத மோகனசுந்தரி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் அன்றைய இரவு  மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இது போதையில் இருந்த சரத்குமாருக்கு தெரியவில்லை. காலையில் எழுந்த சரத்குமார் மோகனசுந்தரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்டவள் தன்னை விட்டு தற்கொலை செய்து கொண்டது சரத்குமாருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் போலீஸ் விசாரணை, மனைவியின் குடும்பத்தினர் என்ன செய்வார்களோ என்ற அச்சம் என பயந்து போன சரத்குமார் அதே சேலையில் மின்விசிறியில் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலை வெகுநேரம் வரை சரத்குமாரின் வீட்டு கதவு திறக்கப்படாதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் சரத்குமார், மோகனசுந்தரி ஆகியோர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ.வும் தனி விசாரணை நடத்தி வருகிறார். இளம் தம்பதி தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ள பின்னணியில் இருந்தது போதைதான். இப்போது பல குடும்பங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதும் போதைதான். இளம் பருவத்திலேயே மதுவிற்கும், போதைப் பொருட்களுக்கும் பலரும் அடிமையாகி வருகின்றனர். அது குடும்பத்தை எப்படி சிதைத்து விடுகிறது என்பதற்கு சரத்குமாரும், மோகனசுந்தரியும் உதாரணம் என்று மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Embed widget