மேலும் அறிய

Crime: சொந்த பாட்டியை கொலை செய்து பித்தளை குவளைக்குள் அமுக்கி வைத்த பேத்தி கைது

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது செல்வமணி பித்தளை குவளையில் தலை கீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பாட்டியை கொலை செய்து பித்தளை குவளையில் மறைத்த வைத்த பேத்தியை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாட்டி கொலை செய்தது மட்டுமின்றி உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது உறவினர்களுடன் சேர்ந்து கதறி அழுது நாடகமும் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி செல்வமணி (55) இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார். மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

செல்வமணி மட்டும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக அக்கம் பக்கத்தினரிடம் செல்வமணி கூறியுள்ளார். அதன் பிறகு நேற்றுமுன்தினம் வரை செல்வமணி வீடு பூட்டி கிடந்துள்ளது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், செல்வமணி மகள் ராஜலட்சுமிக்கு தகவல் அளித்தனர். ராஜலட்சுமி நேற்றுமுன்தினம் மாலை வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்து கடுமையாக துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜலட்சுமி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது செல்வமணி பித்தளை குவளையில் தலை கீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து பாபநாசம் போலீசார் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், செல்வமணி உடலை மீட்டு, விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, செல்வமணியின் பேத்தியான வீரசிங்கம்பேட்டை ரமேஷ் மனைவி ஜெயலட்சுமி (28) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரிடமிருந்து பல்வேறு தடயங்கள் சிக்கின. இதை தொடர்ந்து போலீசார் ஜெயலட்சுமியை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில்; செல்வமணி மகள் கீதா வெளிநாட்டில் உள்ளார். கீதா தனது தாய்க்கு மாதந்தோறும் பணம் அனுப்பி வந்துள்ளார். இதையறிந்த, கீதாவின் மகளான ஜெயலட்சுமி, தனது பாட்டி செல்வமணியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில், இவருக்கும் கடந்த 23ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி தனது பாட்டி செல்வமணியை கீழ தள்ளியுள்ளார்.

இதில் அடிப்பட்டு செல்வமணியின் தலையில் ரத்தம் வந்துள்ளது. இருப்பினும் செல்வமணியை அவரது சேலையால் கழுத்தை தெறித்து கொலை செய்து, பித்தளை குவளைக்குள் ஜெயலட்சுமி அமுக்கி வைத்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாட்டியை கொலை செய்த பின்னர் ஜெயலட்சுமி ஒன்றும் தெரியாதவர் போல் பிரேதத்தை அப்புறப்படுத்தும் பொழுது சொந்தக்காரர்களுடன் சேர்ந்து கதறி அழுது, ஒப்பாரி வைத்து நடித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget