மேலும் அறிய
Advertisement
தாய்லாந்துக்கு கடந்த முயன்ற 2500 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கியது...!
சென்னையிலிருந்து சரக்கு விமானத்தில் கடல் நண்டுகள் என்று கூறி தாய்லாந்து நாட்டிற்கு கடத்தமுயன்ற 25 லட்சம் மதிப்புடைய 2,500 நட்சத்திர ஆமைகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்
சென்னை பழைய விமானநிலைய வளாகத்தில் உள்ள சரக்கு விமான முனையத்தில் தாய்லாந்து நாட்டு தலைநகா் பாங்காக் செல்லும் தாய் ஏா்லைன்ஸ் சரக்கு விமானம் புறப்பட தயாரானது. அந்த சரக்கு விமானத்தில் ஏற்றுவதற்கு 15 பெட்டிகள் தயாராக இருந்தன. அதனுள் கடல் நண்டுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா், சரக்கு விமானத்தில் ஏற்றப்படும் அனைத்து பாா்சல்களையும் பரிசோதித்து ஆய்வு செய்தனா். அவா்களுக்கு இந்த 15 பாா்சல்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறையினா் அந்த பாா்சல்களை திறந்து பாா்த்து பரிசோதித்தனா். அதில் உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து 15 பாா்சல்களையும் விமானத்தில் ஏற்றாமல் நிறுத்தி வைத்தனா். அதன்பின்பு ஒவ்வொரு பாா்சல்களாக திறந்து பாா்த்து, நட்சத்திர ஆமைகளை எண்ணத்தொடங்கினா். 15 பாா்சல்களிலும் மொத்தம் 2,500 நட்சத்திர ஆமைகள் இருந்தன. இதையடுத்து நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
அதோடு சென்னையில் உள்ள மத்திய வன உயிரின காப்பக குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் வந்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அந்த பாா்சல்களில் இருக்கும் முகவரிகள், போன் எண்கள் அனைத்துமே போலியானவை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த நட்சத்திர ஆமைகள் அனைத்தையும் சென்னை வேளச்சேரியில் உள்ள வன உயிரின காப்பகத்து அனுப்பி வைத்தனா். அதோடு சுங்கத்துறையும், வனத்துறையும் இணைந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.
இந்த நட்சத்திர ஆமைகள் ஆந்திர மாநிலம் வனப்பகுதி சதுப்புநிலங்களிலிருந்து பிடித்து சாலை வழியாக சென்னைக்கு கொண்டு வந்து சரக்கு விமானத்தில் தாய்லாந்து கடத்தவிருந்ததாக தெரிகிறது. மேலும் இந்த நட்சத்திர ஆமைகள் வழக்கமாக சிங்கப்பூா், மலேசியா போன்ற நாடுகளுக்கு தான் அதிக அளவில் கடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது தாய்லாந்துக்கு கடத்த தொடங்கியுள்ளனா்.
இந்த ஆமைகளை வெளிநாடுகளில் குறிப்பாக நட்சத்திர ஓட்டல்களில் இறைச்சிக்காக பயன்படுத்துகின்றனா். ஆமை ஓடுகளை பயன்படுத்தி அலங்காரப் பொருட்கள் செய்கின்றனா். இவைகள் மருத்துவ குணமுடையதால் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனா். மேலும் மேலைநாடுகளில் செல்வந்தா்கள் தங்கள் பங்களாக்களில் செல்லப்பிராணிகளாகவும் வளா்க்கின்றனா்.
இதனால் நமது நாட்டில் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை விலைபோகும் நட்சத்திர ஆமைகள், வெளிநாடுகளில் ஒரு ஆமை 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை மதிப்புடையது என்று கூறப்படுகிறது. இதனால் இந்த 2,500 நட்சத்திர ஆமைகளும் சுமாா் 25 லட்சம் மதிப்புடையது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த பாா்சல்களை சரக்கு விமானத்தில் அனுப்ப பதிவு செய்த ஏஜென்சிகளிடமும், அந்த நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் சுங்கத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். நட்சத்திர ஆமைகளை, கடல் நண்டுகள் என்ற பெயரில் பதிவு செய்து வெளிநாட்டிற்கு கடத்தமுயன்ற கடத்தல் ஆசாமிகளை தேடிவருகின்றனா்.
சமீபகாலங்களாக சென்னை விமானத்தில் தொடர்ந்து இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
Chennai Air Cargo Customs seized 2247 Live Indian Star Tortoises from an export consignment destined to Thailand attempted to be smuggled out of India declared as 250 Kgs of Live Mud Crabs. The star tortoises have been handed over to State Forest Department for rehabilitation. pic.twitter.com/ycwFkf8D1j
— Chennai Customs (@ChennaiCustoms) August 18, 2021">
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion