மேலும் அறிய

மொபைல் அழைப்பு துண்டிக்கப்படும்..பணம் பறிக்கும் கும்பல்: இதை பின்பற்ற சொன்ன மத்திய அரசு

Telephonic Call Fraudsters: மொபைல் அழைப்புகள் துண்டிக்கப்படுவதாக கூறி பணம் பறிப்பில் ஈடுபடுவர்களிடம் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு ட்ராய் தெரிவித்துள்ளது.

உங்கள் மொபைல் அழைப்புகளை துண்டிக்க போகிறோம் என்று அழைப்புகள் வழியாகவும் குறுஞ்செய்தி வழியாகவும் , சிலர் பணம் பறிப்பில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி நிலையில், அது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் புகார் தெரிவிப்பதற்கான வழிமுறை குறித்துமான தகவலை வெளியிட்டுள்ளது.

அழைப்பு துண்டிக்கப்படுவதாக பண மோசடி:

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (ட்ராய்)  தெரிவித்துள்ளதாவது, “ அதிகாரிகள் என்ற பெயரில் மோசடி நபர்கள் அனுப்பும் தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள்  வாயிலாக வாடிக்கையாளர்களிடம் அலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும் என்று அச்சுறுத்தி பணம் பறிக்கும்  சட்டவிரோத செயல்கள் நடப்பதாக அண்மையில் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில், அலைபேசி எண் துண்டிப்பது குறித்த எவ்வித தகவல்களையும், தொலைபேசி அழைப்பு வாயிலாகவோ அல்லது பிற வழிகளிலோ வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் நடைமுறை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

Also Read: இந்தியா, பாகிஸ்தானுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: எதற்காக?

”எச்சரிக்கையுடன் இருக்கவும்”

தொலைபேசி இணைப்பை துண்டிப்பது தொடர்பான செய்திகளைத் தெரிவிப்பதற்கு வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள எந்தவொரு மூன்றாம் தரப்பு முகமையையும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து வருவதாகக் கூறும், எந்தவொரு தகவல் தொடர்பும் (அழைப்பு, செய்தி அல்லது அறிவிப்பு) மற்றும் அலைபேசி எண் துண்டிக்கப்படுவதாக அச்சுறுத்துவது போன்றவை மோசடி முயற்சியாகவே, பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய செய்திகள் மீது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read: டார்கெட் முடிக்காததால், ஊழியர் கழுத்தில் பெல்ட் கட்டி நாய் போல் குரைக்க வைத்த கொடூரம்?

உதவி எண்கள் அறிவிப்பு:

சைபர் குற்றம், நிதிசார் மோசடிகள் தொடர்பாக தொலைத்தொடர்பு சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தொலைத்தொடர்புத்துறை  சஞ்சார் சாத்தி தளத்தில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்குரிய மோசடி தகவல் தொடர்புகள் குறித்து புகார் தெரிவிக்க மக்கள் முன்வரவேண்டும் என்று  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக்கொண்டு உள்ளது. மோசடியான அழைப்புகள் குறித்து புகார் அளிப்பதற்கு  https://sancharsaathi.gov.in/sfc/ என்ற இணையதள முகவரியையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இணையதள குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் இதற்கென பிரத்யேக உதவி தொலைபேசி எண் '1930' அல்லது https://cybercrime.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் புகார் அளிக்கலாம் என்றும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தலைப்பு செய்திகள்

'அரசு சம்பளம்... தனியார் கமிஷன்...' - மயிலாடுதுறை டாக்டரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பு!
'அரசு சம்பளம்... தனியார் கமிஷன்...' - மயிலாடுதுறை டாக்டரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பு!
“அவமானத்தை தாங்க முடியல” - மனைவியின் செயலால் மாமியார் வீட்டில் கணவன் எடுத்த விபரீத முடிவு!
“அவமானத்தை தாங்க முடியல” - மனைவியின் செயலால் மாமியார் வீட்டில் கணவன் எடுத்த விபரீத முடிவு!
முன்னாள் அதிமுக அமைச்சர் குடும்பத்தில் சொத்து தகராறு !! தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்
முன்னாள் அதிமுக அமைச்சர் குடும்பத்தில் சொத்து தகராறு !! தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்
காதலன் ஆசைப்பட்ட பைக்...தோழி வீட்டில் 9 பவுன் நகை திருடிய கல்லூரி மாணவி - சிக்கியது எப்படி ?
காதலன் ஆசைப்பட்ட பைக்...தோழி வீட்டில் 9 பவுன் நகை திருடிய கல்லூரி மாணவி - சிக்கியது எப்படி ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Embed widget