மேலும் அறிய
Advertisement
TN Spurious Liquor Death : செங்கல்பட்டிற்கு கள்ளச்சாராயம் வரும் வழி இதுதான்..! தெரிந்தும் கோட்டை விட்டதா போலீஸ்?
" கள்ளச்சாராயம் என்பது மலிவு விலையில் கிடைப்பதால், கிராமத்தை சேர்ந்தவர்கள் அதை வாங்கி பருக விருப்பப் படுவதாகவும் கூறப்படுகிறது "
கள்ளச்சாராயம்?
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும், வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா இருவரும் மே.13 தேதி, போலி மதுபானம் குடித்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
அதேபோல், பெருங்கரணை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகிய மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், சின்னத்தம்பி, வசந்தா இருவரும் உயிரிழந்தனர். சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருங்கரணை பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மற்றொரு நபரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியல்
அஞ்சலை ,சங்கர், சந்திரன், ராஜி, முத்து ,தம்பு ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்குகள் பதிவு
இது தொடர்பாக சித்தாமூர் காவல் நிலையத்தில் ஆறு பிரிவின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்து , விசாரணை மேற்கொண்ட போலீசார், கள்ளச்சாராயம் விற்றதாக அமாவாசை, சந்துரு, வேலு ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்ற நபரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து 135 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நேரில் ஆறுதல்
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சிறு மற்றும் குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சந்தித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து நான்கு பேர் பலியான விவகாரம் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. பிரதீப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு பிரிவை சேர்ந்த செங்கல்பட்டு துணைக் கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்திற்குள் சாராயம் வந்தது எப்படி ?
செங்கல்பட் மாவட்டத்தை பொருத்தவரை நேரடியான கள்ளச்சாராய விற்பனை குறைவு என்றே கூறப்படுகிறது. அதற்கு மாறாக, அரசு டாஸ்மாக்கில் மதுவை வாங்கி, அவற்றை கள்ளச்சாராயம் கலந்து, விற்பனை செய்வதே அதிகம் எனக் கூறப்படுகிறது. அதாவது, அரசு மதுபான கடையில் இருந்து 180ML மது புட்டியை வாங்கி, அவற்றுடன் குறிப்பிட்ட வகை கள்ளச்சாராயத்தை கலந்து, அதை நான்கு புட்டிகளாக மாற்றி, அதிக விலைக்கு விற்று வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில், பாண்டிச்சேரியில் தயாரிக்கப்படும் கள்ளச்சாராயத்தை, மரக்காணம் மற்றும் சூனாமேடு வழியாக கடத்திக் கொண்டு வந்து, செய்யூர் பகுதியில் விற்று வந்ததாக தெரிகிறது. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்யும் பொழுது அதில் முதலீடு செய்யும் பணத்தைவிட பத்திலிருந்து 15 மடங்கு வரை லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே வியாபாரிகள் தொடர்ந்து கள்ளச்சாராயத்தையும் போலி மதுபானங்களையும் விற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
லஞ்சம் வாங்கிய காவல்துறை ?
இதுகுறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தும் கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளனர். செங்கல்பட் பகுதியில் கடந்த ஜூன் மாதம், டெல்லியில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்படுத்தப்பட்ட , சுமார் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ஸ்ப்ரிட் ( கள்ளச்சாராயத்திற்கு மூலப்பொருள் என கூறப்படுகிறது ) லாரியை போலீசார் பிடித்தனர். அவ்வாறு மிகப்பெரிய அளவில் கள்ளச்சாராயம் பிடிக்கப்பட்டும், தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் கிடைப்பது, சாதாரண விஷயமாக இருந்து வந்ததுள்ளது. இதன் எதிரொளியாகவே இவ்வளவு மரணங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
குறிப்பு: மது குடிப்பது உடலுக்கு, வீட்டுக்கு, நாட்டுக்கு கேடு... உயிரை கொல்லும்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion