காவலர் செய்யும் செயலா இது..? ஆதாரத்துடன் வசமாய் சிக்கினர் - நடந்தது என்ன ?
மது அருந்துபவர்கள் வீடியோ எடுத்து மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்ட காவலர் உட்பட இருவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனிமையில் உள்ள ஜோடிகளையும் , மது அருந்துபவர்கள் வீடியோ எடுத்து மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்ட காவலர் உட்பட இருவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர
குற்றங்கள் நிறைந்த பகுதி
சென்னை புறநகர் பகுதிகளில் அதிகளவு குற்றங்கள் நடைபெறுகிறது. கொலை, கொள்ளை, ரவுடிகள் மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையினரும், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாடு காவல்துறை உலகில் மிகச்சிறந்த காவல்துறை ஒன்றாக, பார்க்கப்பட்டு வருகிறது. இருந்தும் ஒரு சில காவலர்கள் செய்யும் செயலால், ஒட்டுமொத்த காவல் துறைக்கு தலைகுனிவாக அமைந்து விடுகிறது. அந்த வகையில் தாம்பரம் பகுதியில் காவலர் ஒருவர் செய்த அராஜக செயலால், காவலரே கம்பி எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.
மிரட்டி பணம் பறித்த காவலர்
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார் (38), மணிவண்ணன் (33) தாம்பரம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் ரயில்வே யார்ட் அருகே மது அருந்தி கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தாங்கள் போலீசார் என கூறி இருவரையும் லட்டியால், அடித்ததுடன் மிரட்டி 4,000 பணத்தை பறித்து கொண்டு சென்றதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வீடியோ எடுத்து மிரட்டி வந்த காவலர்
புகாரின் பேரில் வாகனத்தை எண்ணை கொண்டு பீர்கன்காரனை தலைமை காவலர் அருள்ராஜ் (46) மற்றும் முன்னாள் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணியாற்றிய சதீஷ் (31) என்பதும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரனையில் இது போன்று இரவில் தனிமையில் இருக்கும் ஜோடிகள், மது அருந்துபவர்கள், திருநங்கைகள் உடன் செல்பர்களை ஆகியோரை குறி வைத்து வீடியோ எடுப்பதுடன் பல ஆயிரகனக்கான பணத்தை பறித்து சென்றதாக ஒப்புகொண்டனர்.
சிறையில் காவலர்
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல் பணியில் உள்ளவரே , இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஈடுபட்டுள்ளது. குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், ஒரு காவலர் செய்த செயல் ஒட்டுமொத்த காவல்துறை மீதும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.