மேலும் அறிய

Suicide: நெல்லையில் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. என்ன காரணம்? காவல்துறை தீவிர விசாரணை..

மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே டிரைவராக பணிபுரியும் ஒருவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 17 வயது மகள் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இந்த சூழலில் சரஸ்வதி பூஜை அன்று வீட்டில் அனைவரும் பூஜை செய்து சாமி கும்பிட்டு விட்டு பின் குடும்பத்துடன் அனைவரும் அருகே உள்ள கோயிலுக்கு சென்று உள்ளனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மாணவி தனக்கு தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று உள்ளார். 

இரவில் சாப்பிடாமல் தூங்க சென்ற தனது மகளை சாப்பிட அழைப்பதற்காக தாய் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டி அழைத்தும் அவர் கதவை திறக்காததால் தாய் அங்குள்ள ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது மாணவி தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கூச்சலிட்ட அவர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது பள்ளியில் ஏதேனும் பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது போன்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மாணவியின் தற்கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 


 

தலைப்பு செய்திகள்

"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget