மேலும் அறிய

Chennai Student Suicide : "அம்மாட்ட போய் நிக்காதீங்க.." : நீட் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் செய்த பதிவு.. அதிர்ச்சியளித்த வீடியோ

மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்கொலைக்கு முன்னதாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை வரவழைத்துள்ளது

நீட் தேர்வு பயத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்கொலைக்கு முன்னதாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள பிரதாப் என்பவர் மனைவி ஜெயந்தி. இவர் மகன்கள் கரண்ராஜ், தனுஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். அதில் தனுஷ் எம்.எம்.டி.ஏ அரசு பள்ளியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்பில் 489 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து டாக்டராக ஆசைப்பட்ட அவர் கடந்தாண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். 

பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த அவர் அந்த தேர்வில் 159 மதிப்பெண்கள் பெற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காமல் இருந்துள்ளது. தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்க போதிய பணம் இல்லாததால் தொடர்ந்து வீட்டில் இருந்து நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை வழக்கம் போல ஜெயந்தி வேலைக்கு சென்று திரும்பிய நிலையில் வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். 

அப்போது வீட்டில் உள்ள படுக்கையறையின் மேற்கூரையில் தனுஷ் பெல்ட்டால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைக்கண்டு ஜெயந்தி கதறி அழுதார். தொடர்ந்து இதுகுறித்து சூளைமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த அவர்கள் தனுஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தனுஷின் வீடியோ ஒன்று கிடைத்தது.

என்னுடைய சாவிற்கு நான்தான் காரணம்.

அந்த வீடியோவில் பேசியிருக்கும் தனுஷ், “ என்னுடைய சாவிற்கு நான் தான் காரணம். நான் மட்டும்தான் காரணம். நான் இறந்ததிற்கு பின்னர் எனது சாவிற்கு இவர் தான் காரணம், அவர்தான் காரணம் என்று கற்பனை செய்யக் கூடாது.  ஏன் என்றால் எனக்கு என்ன வரும் என்று தெரியாமல் நானே எனக்குள் ஒரு பொய்யான அறிவை வளர்த்துக்கொண்டேன். அது தவறு என புரிகிறது. வருங்காலத்தை கூட தீர்மானிக்க முடியாத மட்டமான ஆளாக மாறிவிட்டேனே.. அது மட்டுமல்ல என்னுடைய மூளை குழம்பி மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். நான் கிளம்புகிறேன். பாய்” என்று பேசியிருக்கிறார். 

சகோதரர் பேட்டி

மாணவனின் சகோதரர் பேசும்போது, “ ஒரு அகாடமிக்கு சென்று பயிற்சி எடுக்க அனுப்பினோம். அங்கு 10 நாட்கள் சென்றிருப்பான். அதன் பின்னர் நான் வீட்டில் இருக்கும்போதே நன்றாகத்தான் படித்தேன். ஆனால் அங்கு சென்று என்னால் சரியாக படிக்க முடியவில்லை என்று கூறினான். அவனாகத்தான் எங்களிடம் வந்து மருத்துவர் ஆகவேண்டும் என்று கூறினான். அப்போது கூட நாங்கள் சொன்னோம். முயற்சி செய். ஆனால் இதை உன் வாழ்கையாக எடுத்துக்கொள்ளாதே. ஆனால் அவன் என்ன நினைத்தானோ என்று தெரியவில்லை இப்படி செய்து கொண்டான்” என்று பேசினார். 

 

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
Embed widget