மேலும் அறிய

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் மீண்டும் சோகம்.. இலங்கை பயணிக்கு என்ன நடந்தது?

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை பயணி, திடீரென நெஞ்சு வலியால் உயிர் இழப்பு.

இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளாக, தமிழ்நாட்டுக்கு வந்த கணவன் மனைவி, மீண்டும் இலங்கை திரும்புவதற்காக, சென்னை விமான  நிலையத்திற்கு வந்தபோது, கணவர் உயிர் இழந்த சோகம். இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ராவேந்திரா (63). இவருடைய மனைவி உதய ராணி (54). இலங்கை  தமிழர்களான  இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் விசாவில் தமிழ்நாட்டிற்கு வந்தனர். தமிழ்நாட்டில் உள்ள உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை பார்த்துவிட்டு, கோவில்கள் சென்று வழிபாடுகள்  நடத்தினர்.

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் மீண்டும் சோகம்.. இலங்கை பயணிக்கு என்ன நடந்தது?
அதன்பின்பு தங்களுடைய தமிழ்நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, இன்று பிற்பகலில் சென்னையில் இருந்து விமானத்தில் கணவன், மனைவி ஆகிய இருவரும் இலங்கை செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று மதியம் இருவரும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கொழும்பு செல்வதற்காக, டிக்கெட்  எடுத்துவிட்டு, விமான நிலையத்திற்குள் சென்று, போர்டிங் பாஸ் வாங்கி, பாதுகாப்பு சோதனைகள் பிரிவில் நின்று கொண்டு இருந்தனர்.

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் மீண்டும் சோகம்.. இலங்கை பயணிக்கு என்ன நடந்தது?
அப்போது ராவேந்திரா திடீரென நெஞ்சு வலியால் துடித்தார். இதை அடுத்து அவருடைய மனைவி உதய ராணி கணவரின் நெஞ்சை தடவி விட்டபடி, கதறி அழுதார். உடனே சக பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக  சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ராகவேந்திரா மயங்கி சாய்ந்து விட்டார். சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் வந்து ராகவேந்திராவை பரிசோதித்து விட்டு, அவருக்கு ஏற்ப கடுமையான மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் என்று அறிவித்தனர். இதை எடுத்து மனைவி உதயராணி மேலும் கதறி அழுதார்.
 
பெண் பயணிகள் உதயராணியை தேற்றினார். இந்த நிலையில் சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, ராவேந்திரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இது சம்பந்தமாக போலீசார், 174 பிரிவில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி நடத்துகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?

Embed widget