Crime: ஆரோவில் அருகே சொத்து தகராறில் தந்தையை ஆட்டோவை ஏற்றி கொன்ற மகன்
விழுப்புரம் : ஆரோவில் அருகே சொத்து தகராறில் தந்தையை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த மகன் கைது.
விழுப்புரம் : ஆரோவில் அருகே சொத்து தகராறில் தந்தையை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி வயது 72. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பெரியசாமிக்கும் இவரது மகன்கள் ஈஸ்வரன் மற்றும் முருகன் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த மாதம் 21 ஆம் தேதி மூத்த மகன் ஈஸ்வரனின் தூண்டுதலின் பேரில் இளைய மகன் முருகன் தனது சொந்த ஆட்டோவில் அந்த வழியாகச் சென்ற பெரியசாமி மீது வேகமாக கொலை செய்யும் நோக்கில் ஏற்றினார். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு மகன் ஈஸ்வரன் தலைமறாக உள்ளார். இந்நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது பெரியசாமி இறந்த சம்பவத்தையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு தலைமறைவாக உள்ள இரண்டாவது மகன் ஈஸ்வரனை கோட்டகுப்பம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்துக்காக தனது தந்தையை ஆட்டோ ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்