பாண்டிச்சேரி பார்முலா ; சிவகங்கையில் போலி மதுபாட்டில் தயாரித்த ஆசாமிகள் சிக்கினர் !
மதகுபட்டி அருகே செயல்பட்டுவந்த போலி மதுபான ஆலையை நுண்ணறிவு போலீசார் கண்டுபிடித்ததுடன் அதனை நடத்தி வந்த 3 பேரை கைது செய்து தளவாட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லை, தொழிற்சாலைகள் அதிகளவு இயக்கவேண்டும், கைவிடப்பட்ட கிராபைட் நிறுவனத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் சொந்தமா தொழில் தொடங்க வேண்டும் என பலரும் நினைத்து வரும் சூழலில், பாண்டிச்சேரியை சேர்ந்த நபரை கூட்டு சேர்ந்துக் கொண்டு சட்ட விரோதமாக போலி மதுபான ஆலையை இயக்கி வந்துள்ளனர். இந்நிலையில் மது தயாரித்த நபர்கள் டி.ஐ.ஜி தனிப்படை நுண்ணறிவு போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளனர்.
போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு. 3 பேர் கைது.
— arun pothu (@arunpothu92) July 7, 2022
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே செயல்பட்டுவந்த போலி மதுபான ஆலையை நுண்ணறிவு போலீசார் கண்டுபிடித்ததுடன் அதனை நடத்திவந்த 3 பேரை கைது செய்து தளவாட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
further reports to follow - @abpnadu | @iamarunchinna . pic.twitter.com/qLVRQTNAPi
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்